இந்தியா டீம்'க்கு வந்த சோதனை.. "அட போங்க பாஸ்.." உச்சகட்ட விரக்தியில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்கா : டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, அடுத்தடுத்து தடுமாற்றம் கண்டு வருவதால், ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இந்தியா டீம்'க்கு வந்த சோதனை.. "அட போங்க பாஸ்.." உச்சகட்ட விரக்தியில் ரசிகர்கள்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணி, வரலாறு படைத்தது அசத்தியிருந்தது. இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீச, இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றிருந்தது.

pujara and rahane once again failed to impress in second test

சரிந்த விக்கெட்டுகள்

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் ஆரம்பமானது. காயம் காரணமாக இன்றைய போட்டியில், கேப்டன் விராட் கோலி களமிறங்கவில்லை. இதனால், கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ஒருபுறம், ராகுல் மட்டும் பொறுமையாக ஆடி  களத்தில் நிற்க, மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.

pujara and rahane once again failed to impress in second test

ஏமாற்றும் சீனியர் வீரர்கள்

மயங்க் அகர்வால் 26 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த புஜாரா 3 ரன்னிலும், பின்னர் வந்த ரஹானே ரன் எதுவும் எடுக்காமல், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதிகமாக களமிறங்கி வரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர், கடந்த சில மாதங்களாக, எந்த போட்டியிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

pujara and rahane once again failed to impress in second test

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

டிராவிட், லக்ஷ்மண் போன்ற டெஸ்ட் வீரர்கள், இந்திய அணிக்கு கிடைத்ததாக புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை பலரும் பாராட்டினார். பல தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு இருவரும் காரணமாகவும் இருந்துள்ளார்கள். ஆனால், கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இருவரது ஆட்டமும் எடுபடவில்லை. சீனியர் வீரர்களான இவர்களை மாற்றி விட்டு, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் யார் போன்ற இளம் வீரர்களுக்கு அணியில் இடம் வழங்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்தனர்.

pujara and rahane once again failed to impress in second test

தடுமாறும் புஜாரா, ரஹானே

இதனையடுத்து, தென்னாப்பிரிக்க பயணத்திற்கு முன்பும், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை களமிறக்க வேண்டாம் என்றும் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், இந்திய அணி தொடர்ந்து, புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பினை அளித்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், புஜாரா 0 & 16 ரன்களை எடுத்திருந்தார். அதே போல, முதல் இன்னிங்ஸில் 48 ரன்கள் எடுத்த ரஹானே, இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மீண்டும் ஏமாற்றம்

இந்நிலையில், இன்று ஆரம்பமான இரண்டாம் டெஸ்ட் போட்டியின், முதல் நாளிலேயே இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது, ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. அனுபவம் இருப்பதை அடிப்படையாக கொள்ளாமல், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது, துடிப்புடன் செயல்படும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புஜாரா மற்றும் ரஹானே போன்ற சீனியர் வீரர்களின் தொடர்ச்சியான ஃபார்ம் அவுட் விவகாரம், நிச்சயம் இந்திய அணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

PUJARA, RAHANE, IND VS SA, ரஹானே, புஜாரா

மற்ற செய்திகள்