‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தன்னை விமர்சித்த ரசிகருக்கு மிதாலி ராஜ் தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை என பதிலடி கொடுத்துள்ளார்.

‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம் 20 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் படைத்தார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தினர். இதில் சச்சின் டெண்டுல்கரின் பதிவைக் குறிப்பிட்டு மிதாலி நன்றி தெரிவித்திருந்தார். அதில் ஒரு ரசிகர், "வாழ்த்துக்கள் தமிழச்சி" எனக் கூறியுள்ளார். அதற்கு இன்னொரு ரசிகர், “இவருக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் மட்டும்தான் பேசுவார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மிதாலி ராஜ், “தமிழ் என் தாய் மொழி. நான் தமிழ் நன்றாகப் பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நான் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் எல்லா பதிவுகளிலும் என்னைக் குறை கூறுகிறீர்கள். இதுபோன்ற விமர்சனங்கள்தான் என்னை வளர்க்கிறது ” எனக் கூறியுள்ளார்.

 

 

TEAMINDIA, MITHALIRAJ, CAPTAIN, TAMIL, TWEET, INDVSSA, SACHINTENDULKAR, ENGLISH, HINDI, TELUGU