‘கிரிக்கெட் நடந்து கொண்டிருந்தபோது மைதானத்துக்குள்’.. திடீரென பதாகையுடன் ஓடிவந்த நபர்கள்!.. சிட்னியில் பரபரப்பு! எதற்காக தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மைதானத்துக்குள் போராட்டக்காரர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம் அமைக்க 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை பாரத ஸ்டேட் வங்கி அதானிக்குக் கடனாக வழங்கவுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்திரேலியாவில் சிலர் போராடி வருகின்றனர். இந்நிலையில், 1 பில்லியன் டாலர் கடனை அதானிக்கு வழங்கக் கூடாது என்று பதாகைகள் ஏந்தியும், அதானியைத் தடுக்க வேண்டும், நிலக்கரி எடுக்கக் கூடாது என எழுதிய டி ஷர்ட்டினை அணிந்தும் 2 பேர், கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த மைதானத்துக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
கடந்த சில வருடங்களாகவே ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சுட்டிக்காட்டி நிலக்கரிச் சுரங்கம் அIமைக்கக் கூடாது என்று எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. இதனால் ஸ்டாப் அதானி என்கிற இயக்கம் இதற்காகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில், ஆஸ்திரேலியாவில் அதானியின் நிலக்கரிச் சுரங்கத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடுத்த வழக்கில் அதானி தரப்பு வெற்றி கண்டது.
அத்துடன் குயின்ஸ்லாந்தில் 1,500 பேருக்கு இந்தச் சுரங்கத்தில் வேலைவாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் அதானி தரப்பு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்