"லாக்டவுன் நேரத்துல எங்க 'தம்பி' போறீங்க??.." 'பிரித்வி ஷா'வை தடுத்து நிறுத்திய 'போலீஸ்'!.. "அதுக்கு அப்றம் நடந்தது தான் மிகப்பெரிய 'ட்விஸ்ட்'!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, மிகவும் வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றைக்கு சுமார் 4 லட்சம் பேர் வரை, இந்த கொடிய தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, பல இடங்களில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபரகணங்களின் தட்டுப்பாடுகளும், மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அதே போல, மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த வேண்டி, அங்கு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனிடையே, இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா (Prithvi Shaw), ஊரடங்கை மீறிய செயல் ஒன்றைச் செய்து, போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரரான பிரித்வி ஷா, இந்த தொடருக்கு முன்பாக, சையது முஷ்டாக் அலி மற்றும் மற்றும் விஜய் ஹசாரே தொடர்களில் ஆடியிருந்தார். தொடர்ந்து, ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்றிருந்தார். அடுத்தடுத்து, கிரிக்கெட் போட்டிகள் ஆடி வந்த காரணத்தினால், தற்போது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலா செய்ய முடிவு செய்துள்ளார் பிரித்வி ஷா.
மகாராஷ்டிராவில் உள்ள தனது வீட்டிலிருந்து, கார் மூலமாக நண்பர்களுடன் கோவா கிளம்பியிருக்கிறார் பிரித்வி ஷா. அப்போது, கோல்ஹாபூர் வழியாக சென்ற போது, போலீசார் அவரது காரை நிறுத்தியுள்ளனர். ஊரடங்கு காரணமாக, இ பாஸ் தேவை என்ற நிலையில், அது இல்லாமலே பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, போலீசாரிடம் வேண்டிப் பார்த்தும் விடவில்லை என தெரிகிறது. இறுதியில், தனது மொபைல் போன் மூலமாக, இ பாஸ் அப்ளை செய்துள்ளார் பிரித்வி ஷா. அடுத்த ஒரு மணி நேரத்தில், அவருக்கு பாஸ் கிடைக்க, அதனைக் காட்டி, அங்கிருந்து கோவா கிளம்பிச் சென்றார் பிரித்வி ஷா.
மற்ற செய்திகள்