‘வார்ம் அப் போட்டிதான்’... ‘அதுக்காக இப்படியா?’... ‘சொல்லிவச்ச மாதிரி இந்திய ‘ஏ’ அணி வீரர்கள் செய்த காரியம்’... !!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட தொடருக்கு முன்னதாக, இந்திய ஏ அணி, ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் தொடர்ச்சியாக இந்திய ‘ஏ’ அணி வீரர்கள் டக் அவுட் ஆகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை இழந்துள்ளது. இதையடுத்து, தற்போது 3 டி20 போட்டிகளில் பங்கேற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆடி கொண்டிருக்கிறது. வரும் 17-ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் சில வீரர்களை தவிர, மற்ற வீரர்கள் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியுடன் 2, மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் துவக்க வீரர் ரோகித் சர்மா, டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா மாட்டாரா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், அவருக்கு பதிலாக யாரை துவக்க வீரராக களம் இறக்குவது என்ற போட்டி இந்திய அணியில் நிலவி வருகிறது.
இதற்கிடையில், டெஸ்ட் அணியில் முன்னதாக துவக்க வீரராக ஆடிய இளம் வீரர் ப்ரித்வி ஷா மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையே ஆன பயிற்சிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக ஆடும் வீரருக்கு அணியில் துவக்க வீரராக இடம் கிடைக்கும் என கருதப்பட்டது. இந்தப் போட்டியில் ப்ரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் இருவருமே துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
போட்டியில் ஷுப்மன் கில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ப்ரித்வி ஷா 8 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். விராட் கோலி, ரவி சாஸ்திரி நம்பிக்கை வைத்த இரு வீரர்களும் டக் அவுட் ஆனது இந்திய அணி தேர்வுக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.
இவர்களில் ஒருவருக்கு எதை வைத்து அணியில் துவக்க வீரராக வாய்ப்பு கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் குழப்பம் நிலவியுள்ளது. இதே போட்டியின் அடுத்த இன்னிங்க்ஸ் மற்றும் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து, அதில் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பயிற்சிப் போட்டியில் இந்திய வீரர்கள் சொதப்பலாகவே பேட்டிங் செய்தனர். புஜாரா 54 ரன்கள் எடுத்தார். ரஹானே நிலையாக நின்று ஆடினார். ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் டக் அவுட் ஆனதோடு, விஹாரி 15, சாஹா 0, அஸ்வின் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
Shubman Gill ✅
Prithvi Shaw ✅
The Aus A side had the perfect start against the Indians in Sydney
WATCH LIVE: https://t.co/bz6aBDzoh4 #AUSAvIND pic.twitter.com/rTV7RDIXIg
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
மற்ற செய்திகள்