"பண்றத எல்லாம் பண்ணிட்டு சிரிப்ப பாரு.." 'பிரித்வி ஷா' செயலால் பயந்த 'ரிஷப் பண்ட்'.. ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு'ங்கோ.. 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் நேற்று மோதிய போட்டியில், டெல்லி அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

"பண்றத எல்லாம் பண்ணிட்டு சிரிப்ப பாரு.." 'பிரித்வி ஷா' செயலால் பயந்த 'ரிஷப் பண்ட்'.. ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு'ங்கோ.. 'வைரல்' வீடியோ!!

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மற்ற அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், மயங்க் அகர்வால் (Mayank Agarwal) தனியாளாக பஞ்சாப் அணியைத் தூக்கி நிறுத்தினார். தொடக்க வீரராக களமிறங்கி, கடைசி வரை களத்தில் நின்ற அவர், 58 பந்துகளில், 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தது. எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ், 18 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 69 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.

இந்த வெற்றியின் காரணமாக, டெல்லி அணி புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது. இதனிடையே, இந்த போட்டியின் நடுவே நடந்த செயல் தொடர்பான வீடியோ ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இரண்டாவது ஓவரை ஸ்டியோனிஸ் வீசினார்.

அப்போது பந்தை எதிர்கொண்ட மயங்க் அகர்வால், பந்தினை டீப் லெக் ஸ்கொயர் திசையில் அடித்தார். அப்பகுதியில், ஃபீல்டிங் நின்ற பிரித்வி ஷா (Prithvi Shaw), பந்தினை எடுத்து வேகமாக வீசினார். இந்த பந்து தனது தலைக்கு மேலே வருவதை அறிந்து கொண்ட கீப்பர் ரிஷப் பண்ட், பயந்து போய், தனது கையை தலை மீது தூக்கிக் கொண்டு, கீழே குனிந்து கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து, பண்ட் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்ற செய்திகள்