திடீரென வலியால் துடித்த 'பிரித்வி ஷா'.. "எல்லாம் சரி ஆனதுக்கு அப்றமா, அவரு செஞ்ச வேல தான் இப்போ செம 'வைரல்'!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசனில், பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த போட்டி, கொல்கத்தா வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திடீரென வலியால் துடித்த 'பிரித்வி ஷா'.. "எல்லாம் சரி ஆனதுக்கு அப்றமா, அவரு செஞ்ச வேல தான் இப்போ செம 'வைரல்'!!"

முன்னதாக, நேற்று கடைசியாக நடைபெற்றிருந்த போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 18 ஆவது ஓவரிலேயே, மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, வெற்றி இலக்கை எட்டி அசத்தியது.

இந்த போட்டிக்கு இடையே, டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இளம் வீரர் பிரித்வி ஷா (Prithvi Shaw) செய்த செயல் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. டெல்லி அணி பேட்டிங் செய்த போது, மூன்றாவது ஓவரை பஞ்சாப் வீரர் மெரிடித் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை அவர், சுமார் 140 கி.மீ வேகத்தில் வீசினார்.

இதனை எதிர்கொண்ட பிரித்வி ஷா, பந்தினை தவறவிட, அந்த பந்து அவரது காலின் இடையே பட்டது. இதன் காரணமாக, சற்று வலியால் அவதிப்பட, உடனடியாக டெல்லி அணியின் பிசியோ, மைதானத்திற்கு விரைந்து வந்தார். தொடர்ந்து, பிரித்வி ஷாவிற்கு எந்தவித குழப்பமும் இல்லை என தெரிந்தது. இதன் பிறகு, தனது பேண்ட்டை விலக்கிப் பார்த்த பிரித்வி ஷா, சிரித்துக் கொண்டே இருந்தார்.

 

இதுகுறித்த வீடியோக்களை நெட்டிசன்கள் பகிர ஆரம்பிக்க, அதிகம் வைரலாக தொடங்கியது. அது மட்டுமில்லாமல், இது தொடர்பான மீம் வீடியோக்கள் சிலவற்றை பிரித்வி ஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

 

மற்ற செய்திகள்