'நம்பிக்கை நட்சத்திரமா இருந்தாரு'... 'ஊக்கமருந்து சோதனை'யில் சிக்கிய 'இளம் வீரர்'... பறிபோன வாய்ப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கியிருப்பது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிரித்வி ஷா, சர்வதேச அளவில் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி 237 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் அடக்கம். வருங்கால இந்திய அணியில் சிறந்த அளவில் ஜொலிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட அவர், தற்போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷயத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை பிரித்வி ஷா உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16 ஆம் தேதி அவர் மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிரித்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை விளையாட தடை செய்யப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Prithvi Shaw (@PrithviShaw) July 30, 2019