‘யார் சொல்லியும் கேட்காமல் நம்பி எடுத்த கேப்டன் கோலி’... 'சொல்லி வச்ச மாதிரியே'... 'திரும்பவும் அதே தவறை செய்த இளம் வீரர்’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா டக் அவுட் ஆகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் மீண்டும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்ங்கை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா களம் இறங்கினர்.
களத்தில் இறங்கிய 2-வது பந்திலேயே டக் அவுட் ஆகி ப்ரித்வி ஷா வெளியேறினார். இதையடுத்து ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஏனெனில், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2 பயிற்சி ஆட்டங்களிலும் 0, 19, 40, 3 என்று எடுத்து அதிர்ச்சி தந்தார். இதற்கு முன்னதாக துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியபோது ஃபார்ம் அவுட்டில் இருந்ததால், சில போட்டிகளில், அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், அவரை நீக்கினார்.
இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டிக்கான வீரர்களில் ப்ரித்வி ஷா அறிவிக்கப்பட்டதை ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். அவருக்கு பதிலாக ஷுப்மன் கில், ரிஷப் பந்த் அல்லது கே.எல். ராகுல் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று கூறியிருந்தனர். மேலும் பயிற்சி ஆட்டத்திலேயே ஸ்விங் பந்து வீச்சில் ப்ரித்வி ஷா எளிதாக அவுட் ஆவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்நிலையில், பலர் சொல்லியும், ஃபார்ம் அவுட் ஆன ப்ரித்வி ஷாவை அணியில் தேர்வு செய்தார் கேப்டன் விராட் கோலி. கடைசியில் கேப்டன் கோலி வைத்த நம்பிக்கையை டக் அவுட்டாகி ப்ரித்வி ஷா ஏமாற்றியுள்ளார். அவர் மோசமான பார்மில் இருந்தும் அவரை அணியில் தேர்வு செய்தது ஏன்? என பலரும் கடுமையாக விமர்சனம் செய்யத் துவங்கி உள்ளனர்.
ரன் குவிக்க மாட்டார், விரைவில் விக்கெட்டை பறி கொடுப்பார் என்பது ஆஸ்திரேலிய அணிக்கும் கூட தெரிந்தே இருந்தது. இதற்குத்தான் கோலி அவரை அணியில் தேர்வு செய்தாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் ஃபார்ம் அவுட் என்பதை விட அவரது பேட்டிங் டெக்னிக்கில் தவறு உள்ளது. இதை அவரது ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் முதல் முன்னாள் வீரர்கள் பலரும் கூறி உள்ளனர்.
இப்படி அனைவருக்கும் அவரது பலவீனம் தெரிந்த நிலையில் அவரை ஏன் அணியில் தேர்வு செய்ய வேண்டும்? கேப்டன் விராட் கோலி வெளியில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக ப்ரித்வி ஷாவை தொடர்ந்து அணியில் தேர்வு செய்கிறாரா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர். இதேபோல் மயங்க் அகர்வால் 17 ரன்களில் அவுட் ஆகி உள்ளார்.
"If he does have a chink in his armour it's the ball which does come back into him...
"Quite often leaves a big gap between bat and pad and that's where the Aussies will target." @RickyPonting at his peerless best for the Prithvi Shaw wicket #AUSvIND pic.twitter.com/4nh67zBcpU
— 7Cricket (@7Cricket) December 17, 2020
Meanwhile those who saw Prithvi Shaw as future Sachin pic.twitter.com/YJaZShmV3M
— Himank (@Thin_memer) December 12, 2020
Artist. Art#INDvAUS #PrithviShaw pic.twitter.com/JQixe2S5rq
— $ A C H I N (@HitmanL0ver) December 17, 2020
First over main out kon hoga
Prithvi show = pic.twitter.com/2GpARu7UzU
— Ram Meena (@RamMeenaHindu) December 17, 2020
Fan's to Prithvi show bhai aaj first over main out mat hona please
Prithvi show = pic.twitter.com/TLAQRxUMn0
— Ram Meena (@RamMeenaHindu) December 17, 2020
மற்ற செய்திகள்