"இதெல்லாம் ஒரு குத்தமா யா??... இப்படி வெச்சு செஞ்சிட்டீங்களே..." 'இளம்' வீரரை ஓவராக கிண்டல் செய்த 'நெட்டிசன்'கள்,,.. நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது நடைபெற்று வரும்  ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் ப்ரித்வி ஷா டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

"இதெல்லாம் ஒரு குத்தமா யா??... இப்படி வெச்சு செஞ்சிட்டீங்களே..." 'இளம்' வீரரை ஓவராக கிண்டல் செய்த 'நெட்டிசன்'கள்,,.. நடந்தது என்ன??

டெல்லி அணி, தங்களின் முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அப்போது, தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, தவான் சதத்தின் உதவியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. 

 

முன்னதாக, ப்ரித்வி ஷா ஆட்டமிழந்த சில நிமிடங்களுக்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். இது தொடர்பாக, அவரது புகைப்படங்கள் அதிகம் வைரலான நிலையில், நெட்டிசன்கள் அதிகம் இவரை கலாய்க்கத் தொடங்கினர்.

ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தைத் தொடர்ந்து, அவர் உணவருந்திக் கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து இது தொடர்பான மீம்ஸ்களை பதிவிட்டனர்.

 

 

தான் அதிகம் பசியுடன் இருந்ததால் தான் உணவு உண்டேன் என ப்ரித்வி ஷா இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார். பலர் அவரை ட்ரோல் செய்தாலும், மேலும் சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பசி என்பது இயற்கையான ஒன்றே, அதற்காக எப்படி அவரை குற்றம் சொல்ல முடியும் என ஆதரவு கருத்துக்களும் இருந்து வருகிறது.

மற்ற செய்திகள்