ரோஹித் ஷர்மாவிற்கு தொப்பியை கொடுத்ததும்.. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய பிரதமர் மோடி..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட்.. மைதானத்தில் இருநாட்டு பிரதமர்கள்.. வைரலாகும் வீடியோ..!
வெற்றி பெற போவது யார்?
முன்னதாக, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை தக்க வைத்திருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி சிறப்பாக பந்து வீசி அசத்தியிருந்த சூழலில் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தடுமாற்றம் கண்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறவும் செய்திருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி இருந்த மூன்றாவது போட்டியில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு நேர்மாறான சம்பவம் நடந்திருந்தது. அதாவது இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் சேர்க்கவும் கடும் தடுமாற்றம் கண்டது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளிலேயே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடரின் இறுதிப் போட்டியில் முன்னேற்றம் கண்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
நான்காவது டெஸ்ட் போட்டி.
மறுபக்கம் தற்போது ஆரம்பமாகியுள்ள நான்காவது போட்டியை இந்திய அணி வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட், அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனான மார்னஸ், ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழந்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக, இந்த போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் இருநாட்டு பிரதமர்களை வரவேற்றனர்.
பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி சம்பவம்
இதனையடுத்து, மைதானத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பிரதமர் மோடி Cap-ஐ வழங்கினார். அதே போல, ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்திற்கு அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் கேப்பை வழங்கினார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 75 ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இருநாட்டு பிரதமர்களும் வீரர்களுடன் இணைந்து மரியாதை செய்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில், ரோஹித் ஷர்மாவிற்கு தொப்பியை பிரதமர் மோடி வழங்கியதும் செய்த நெகிழ்ச்சிப்பூர்வமான சம்பவம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ரோஹித்திற்கு கைகுலுக்கி தொப்பியை கொடுத்த பின்னர், இந்திய பிரதமர் மோடி நேராக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடமும் கைகுலுக்கி வாழ்த்தினார். தொடர்ந்து, நரேந்திர மோடி, ஆண்டனி அல்பனீஸ், ரோஹித் ஷர்மா, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கைப்பிடித்தபிடி உயர்த்தியும் நின்றனர்.
— cricket fan (@cricketfanvideo) March 9, 2023
Also Read | "டி 20 மேட்ச்னா இப்டி இருக்கணும்".. ஒவ்வொரு பந்தும் ஃபயர்.. 20 ஓவர் மேட்சில் நடந்த வேற மாதிரி சம்பவம்!!
மற்ற செய்திகள்