‘எதிரணிக்கு இது டேஞ்சர் நியூஸ்’.. நெருங்கும் ஐபிஎல்.. கோலி குறித்து மேக்ஸ்வெல் சொன்ன விஷயம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பேசியுள்ளார்.
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால், மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து பேசியுள்ளார். அதில், ‘விராட் கோலி இனிமேல் ஆக்ரோஷமான வீரர் கிடையாது. பெரும் சுமையாக இருந்த கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம் என அவருக்குத் தெரியும். கேப்டன் பொறுப்பில் இருந்த அழுத்ததை அவர் இறக்கி வைப்பது எதிரணிக்கு அபாயகரமான செய்தி. அழுத்தங்கள் இல்லாமல் இருப்பதுதான் அவருக்கு அற்புதமான விஷயம். வெளியிலிருந்து எந்தவித அழுத்தமும் இல்லாமல் இருந்தால் அடுத்த சில ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை அவர் அனுபவித்து விளையாடுவார்’ என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார். இவர் தலைமையிலான பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இது அவர் மீது பெரிய விமர்சனமாக வைக்கப்பட்டது. தற்போது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியிருந்தாலும் பெங்களூரு அணியின் முக்கிய வீரராகவே விராட் கோலி இருந்து வருகிறார்.
அதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இவரை பெங்களூரு அணி எடுத்தது. டு பிளசிஸ், இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்