"அவர 'கிண்டல்' பண்ண உங்களுக்கு யாருங்க 'அனுமதி' குடுத்தது??..." 'கேப்டனுக்கு' ஆதரவாக 'குரல்' கொடுத்த 'முன்னாள்' வீரர்... பரபரப்பு 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமாக தோல்வியடைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டான நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் மீது கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் அணியிலுள்ள வீரர்கள் பலரை மாற்றி புதிய அணியை தயார் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் இனியுள்ள போட்டிகளில் பங்கேற்காமல் இந்தியா திரும்பவுள்ளார். ஏற்கனவே, இந்திய அணி மோசமான பாஃர்மில் உள்ளதால் இப்படி ஒரு சூழ்நிலையில் கோலி இந்தியா திரும்பவுள்ளதை ரசிகர்கள் அதிகம் கிண்டல் செய்து வருகின்றனர். அத்துடன், அனுஷ்கா ஷர்மாவையும் இணைத்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 'ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். ஒருவர் அப்படி முடிவு ஒன்றை எடுக்கிறார் என்றால் அது அவருடைய விருப்பம். கோலி தனது குழந்தை பிறப்பிற்காக அங்கு இருக்க வேண்டும் என விரும்புகிறார். அதே போல அவரது மனைவியும் தனது கணவர் அருகில் இருக்க வேண்டும் என விருப்பப்படுகிறார். இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே இதுகுறித்து பிசிசிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போட்டியில் தோல்வியடைந்ததும், உடனடியாக கேப்டன் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் குறை கூற ஆரம்பித்து விட்டீர்கள். ஒருவரின் குடும்ப வாழ்க்கையை எப்படி அவரது தொழிலுடன் சேர்த்து உங்களால் பேச முடியும்?. இரண்டையும் தனியாக பாருங்கள்.
எல்லா முடிவையும் கோலி ஏற்கனவே எடுத்திருந்த போதும் அவரை ஏன் இப்போது அதிகம் விமர்சனம் செய்கிறார்கள்?. அதற்கு காரணம் முதல் டெஸ்டில் நாம் அடைந்த தோல்வி தான். தோல்வியால் நாம் அனைவரும் வேதனையில் இருக்கிறோம் என்பதற்காக குறிப்பிட்ட நபர் செய்யும் தனிப்பட்ட செயலை கிண்டல் செய்ய நமக்கு யாரும் உரிமை தரவில்லை' என கோலியை விமர்சனம் செய்தவர்களுக்கு ஓஜா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்