Prepaid-ல இருந்து Postpaid-க்கு மாறுன மாதிரி இருக்கு ரிஷப் பந்த் அடிச்ச ஷாட்.. பங்கமாய் கலாய்த்த முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரிஷப் பந்தின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

Prepaid-ல இருந்து Postpaid-க்கு மாறுன மாதிரி இருக்கு ரிஷப் பந்த் அடிச்ச ஷாட்.. பங்கமாய் கலாய்த்த முன்னாள் வீரர்..!

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

Pragyan Ojha hilarious comment on Rishabh Pant

இதனை அடுத்து ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளன. அதனால் இன்று (11.01.2022) நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Pragyan Ojha hilarious comment on Rishabh Pant

2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களமிறங்கினார். இக்கட்டான நிலையில் அணி இருந்தபோது கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு அவர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Pragyan Ojha hilarious comment on Rishabh Pant

இந்த நிலையில் ரிஷப் பந்தின் ஷாட் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘ரிஷப் பந்த் அடித்த ஷாட்டை பார்க்கும்போது பிரீபெய்ட் சர்வீசில் இருந்து போஸ்ட்பெய்ட் சர்வீசுக்கு மாறி வருவது போல் இருந்தது’ என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Pragyan Ojha hilarious comment on Rishabh Pant

நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலியிடம் ரிஷப் பந்தின் மோசமான ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஒவ்வொரு வீரருக்கும் மோசமான காலகட்டம் என்பது வரும், அதிலிருந்து மீண்டுவர கால அவகாசம் கொடுக்க வேண்டும் என ரிஷப் பந்துக்கு ஆதரவாக கோலி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RISHABHPANT, INDVSA

மற்ற செய்திகள்