3 தசாப்தம்.. 30 ஆண்டு கால சகாப்தம்!.. WWEல் இருந்து பிரியாவிடை பெற்ற அண்டர்டேக்கர்.. ஜான் சீனாவின் இதயம் நெகிழும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

WWE சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான அண்டர்டேக்கரின் இறுதி பிரியாவிடை சர்வைவர் சீரிஸ் 2020ல் இடம்பெற்றது. இந்நிலையில், எல்லோரும் நம்பமுடியாத வாழ்க்கையை வாழ்ந்ததற்காக அண்டர்டேக்கரை வாழ்த்தி வருகிறார்கள்.

3 தசாப்தம்.. 30 ஆண்டு கால சகாப்தம்!.. WWEல் இருந்து பிரியாவிடை பெற்ற அண்டர்டேக்கர்.. ஜான் சீனாவின் இதயம் நெகிழும் ட்வீட்!

இந்தில் 16 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற ஜான் சீனா , அண்டர்டேக்கருக்கு இதயப்பூர்வமான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “மூன்று தசாப்தங்களாக WWEக்கு முழு மனதுடன் அண்டர்டேக்கர் தன்னை அர்ப்பணித்த பின்னர், இன்றிரவு ஒரு அசாதாரணமான முடிவுக்கு நாங்கள் சாட்சியாக நிற்கிறோம். WWEUniverse-ன் உறுப்பினராக, நன்றி டேக்கர்” என்று #ThankYouTaker #SurvivorSeries #Undertaker30 உள்ளிட்ட ஹேஷ்டேகுகளுடன் பகிர்ந்துள்ளார்.

Popular wwe champion heartfelt tweet Over undertaker farewell

ஜான் சீனாவின் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் அண்டர்டேக்கர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார், இருவரும் சில மேட்ச்களில் நேருக்கு நேராகவும் மோதியுள்ளனர்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு WWE ரெஸில்மேனியா 34-ல் இருவருக்குமான சண்டைப் போட்டி நடந்தது, அதில் தி அண்டர்டேக்கர் திரும்பி வந்ததுடன் மூன்று நிமிடங்களுக்குள் ஜான் சீனாவை தோற்கடித்தார்.

சர்வைவர் சீரிஸ் 2020-ல் அண்டர்டேக்கரின் இறுதி பிரியாவிடை WWEUniverseக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம்தான்.

மற்ற செய்திகள்