WPL : "நெறய பணம் வேஸ்ட் பண்றா".. 1.9 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வீராங்கனை.. அவங்க அப்பா வெச்ச கோரிக்கை தான் அல்டிமேட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஆடவர்களுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, இந்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளும் நடைபெற உள்ளது.

WPL : "நெறய பணம் வேஸ்ட் பண்றா".. 1.9 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வீராங்கனை.. அவங்க அப்பா வெச்ச கோரிக்கை தான் அல்டிமேட்!!

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | "குற்றப் பரம்பரை நாவலை படமாக்க தமிழ்ல இயக்குனர்களே இல்ல".. "ராஜமௌலி மாதிரி ஆளுங்க".. எழுத்தாளர் வேல‌. ராமமூர்த்தி EXCLUSIVE

ஆடவர் ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் அணிகளை எடுத்துள்ளது. குஜார்ட் ஜெய்ன்ட்ஸ், UP வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட 5 அணிகள் மகளிருக்கான ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது.

முன்னதாக, கடந்த சில தினங்கள் முன்பு இந்த 20 லீக் தொடருக்கான ஏலமும் நடைபெற்றிருந்தது. மகளிருக்கான முதல் பிரீமியர் லீக் தொடர் என்பதால் ஏலத்தின் போதே கடும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

இதில் அதிகபட்சமாக இந்திய மகளிர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ம்ரிதி மந்தனாவை 3.4 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இது தவிர இன்னும் ஏராளமான இந்திய வீராங்கனைகள் மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகளும் சிறந்த தொகைக்கு ஏலம் போய் தொடர் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அந்த வகையில், இந்திய மகளிர் அணியின் ஆல் ரவுண்டரான பூஜா வஸ்ட்ரக்கரை மும்பை இந்தியன்ஸ் அணி 1.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த நிலையில் தனது மகள் பூஜா குறித்து அவரது தந்தை பேசி உள்ள சில விஷயங்கள் தற்போது அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Pooja Vastrakar father about her wpl auction money

Images are subject to © copyright to their respective owners.

"நான்கு வயதிலிருந்து அவர் கிரிக்கெட் ஆடி வருகிறார். ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவார் என நான் நினைத்து கூட பார்த்ததில்லை. கிரிக்கெட்டிற்காக பணம் கேட்கும் போது ஏன் கிரிக்கெட்டிற்காக பணம் வீணடிக்கிறாய் என்று நான் கேட்பேன். ஆனால் நான் ஒரு நாள் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வாவேன் என என்னிடம் கூறி இருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் மகளிர் அணிக்கான டி20 உலக கோப்பைக்கு முன்பு கூட 15 லட்ச ரூபாய்க்கு எனக்கு ஒரு கார் வாங்கி கொடுத்தார். ஆனால் அதையே பணம் வீணாக அவர் செலவு செய்து விட்டார் என்று தான் நான் கருதுகிறேன். பூஜா நிறைய பணங்களை வீணடித்து விட்டார். அதனால் அவர் தற்போது ஏலத்தில் பெற்ற தொகையை பிக்சட் டெபாசிட் அக்கவுண்டில் செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்

Also Read | பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக அளவில் ஏற்பட்ட பரபரப்பு..!

CRICKET, POOJA VASTRAKAR, POOJA VASTRAKAR FATHER, WPL AUCTION, WPL AUCTION MONEY

மற்ற செய்திகள்