மீண்டும் 'BP'எ எகிற வெச்ச 'மேட்ச்'.."18 ஆவது ஓவர்ல நடந்த அந்த ஒரு 'விஷயத்தால' தான் மொத்தமா கை விட்டு போயிடுச்சு.." ஏங்கிப் போன 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் மோதும் போட்டிகளை காண்பதற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மீண்டும் 'BP'எ எகிற வெச்ச 'மேட்ச்'.."18 ஆவது ஓவர்ல நடந்த அந்த ஒரு 'விஷயத்தால' தான் மொத்தமா கை விட்டு போயிடுச்சு.." ஏங்கிப் போன 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!

இந்நிலையில், 14 ஆவது ஐபிஎல் சீசனின், மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று முதல் முறையாக மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி ஆடிய சிஎஸ்கேவின் தொடக்க வீரர் கெய்க்வாட், முதல் ஓவரிலேயே நடையைக் கட்டினார்.

இருந்த போதும், சென்னை அணி வீரர்கள் மிகவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். மொயின் அலி 58 ரன்களும், டுபிளஸ்ஸிஸ் 50 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து, மற்றொரு வீரர் ராயுடு கடைசி கட்டத்தில், மும்பை பந்து வீச்சாளர்களை சிதறடித்தார்.

கடைசி வரை களத்தில் நின்ற ராயுடு, 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும், நடுவே சில ஓவர்களில் நிதானமாக ஆடியது.

இதனைத் தொடர்ந்து, மும்பை வீரர் பொல்லார்ட் (Pollard), களமிறங்கியது முதலே அதிரடி காட்ட, போட்டி மெல்ல மெல்ல, மும்பை பக்கம் திரும்ப ஆரம்பித்தது. இருந்த போதும், கடைசி கட்டத்தில் சில விக்கெட்டுகள் விழுந்ததால், பரபரப்பு நிலவியது.

இறுதி ஓவரில், மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, கடைசி பந்தில் இலக்கை எட்டி ஆட்டத்தை அதிரடியாக முடித்து வைத்தார் பொல்லார்ட். பொதுவாக, மற்ற போட்டிகளில் சொதப்பினால் கூட, சென்னை அணிக்கு எதிரான போட்டி என்றால், பொல்லார்ட் தனியாளாக கூட பொளந்து கட்டுவார். அதனைத் தான் இன்றும் செய்து, பட்டையைக் கிளப்பியுள்ளார்.

ஐபிஎல் தொடரிலேயே மும்பை அணியின் சிறந்த சேசிங் ஸ்கோராக இது பதிவானது. இந்த போட்டியில், சென்னை பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினாலும், கடைசி சமயத்தில், சென்னை அணி வீரர் ஒருவர் செய்த தவறு ஒன்று, போட்டியை சென்னை அணி கோட்டை விட முக்கிய காரணமாக அமைந்தது.

தாக்கூர் வீசிய 18 ஆவது ஓவரில், பொல்லார்ட் அடித்த பந்து, லெக் சைடு பக்கம் சிக்ஸ் லைன் அருகே உயர்ந்து செல்ல, அங்கு ஃபீல்டிங் நின்ற டுபிளஸ்ஸிஸ் (Du Plessis) கைக்குச் சென்றது. ஆனால், சென்னை அணியில் மிகவும் நம்பிக்கை வாய்ந்த பீல்டர்களில் ஒருவரான டுபிளஸ்ஸிஸ், இந்த கேட்சைத் தவற விட்ட நிலையில், சென்னை வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் அதிர்ச்சியடைந்தனர்.

அப்படி கைக்கு வந்த பொல்லார்ட் விக்கெட்டை சென்னை அணி மிஸ் செய்தது தான், போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட பொல்லார்ட், அதன் பிறகு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்து வெற்றியை மும்பை வசமாக்கினார்.

இதனால், வெற்றி வாய்ப்பை சென்னை அணி கோட்டை விட்டது பற்றி, சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்