'உங்க' இஷ்டத்துக்கெல்லாம் பண்ண முடியாது... டிராவிட்-பும்ரா 'விவகாரத்தில்'... கங்குலி வைத்த 'செக்'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி வீரர்கள் காயம்பட்டால் பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பிசிசிஐ விதிமுறை. ஆனால் அங்கு தரமான சிகிச்சைகள் கிடைக்காது என கருதும் மூத்த வீரர்கள் தங்கள் செலவில் வெளிநாடுகளுக்கு சென்றோ, தனி நிபுணர்களை வைத்துக்கொண்டோ தங்களது உடல்நிலையை கவனித்துக் கொள்கின்றனர்.
சமீபத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக தனி நிபுணர் ஒருவரின் பெயரில் உடற்பயிற்சிகள் செய்து அதிலிருந்து மீண்டு வந்தார். இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்நிலை குறித்த சர்டிபிகேட் பெற வேண்டும். அங்குதான் சிக்கல் ஆர்மபித்தது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் டிராவிட், பும்ரா வெளியில் சிகிச்சை எடுத்ததால் அவருக்கு உடற்தகுதி தேர்வு நடத்த மறுத்து விட்டார்.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததை அடுத்து டிராவிட்டை சந்தித்து பேசிய கங்குலி அதற்குப்பின் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர், '' நான் நேற்று டிராவிட்டை சந்தித்து பேசினேன். பந்து வீச்சாளர்கள் இனி தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தான் செல்ல வேண்டும். வேறு யாரேனும் தங்களை குணப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாலும் அங்கு தான் செல்ல வேண்டும்.
வீரர்களுக்கு தேவையானதை ஏற்பாடு செய்து அவர்களுக்கு தனிமை ஏற்படாதபடி பார்த்துக் கொள்வோம். தேசிய கிரிக்கெட் அகாடமியின் கட்டிட வேலைகள் விரைவில் துவங்கவுள்ளன. 18 மாதங்களில் தேசிய கிரிக்கெட் அகாடமி மிகவும் சிறப்பாக செயல்படும்,'' என தெரிவித்து இருக்கிறார்.