ஹைதராபாத் - ராஜஸ்தான் போட்டியில் கருப்பு நிற Band உடன் களமிறங்கிய வீரர்கள்.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிக்கு இடையேயான போட்டியில் வீரர்கள் அனைவரும் கருப்பு நிற கைப்பட்டையை அணிந்து விளையாடினர். இதற்கான காரணம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் - ராஜஸ்தான் போட்டியில் கருப்பு நிற Band உடன் களமிறங்கிய வீரர்கள்.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!

Images are subject to © copyright to their respective owners.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் இரு அணி வீரர்கள் மற்றும் நடுவர் ஆகியோர் கையில் கருப்பு நிற பேண்டை அணிந்து விளையாடினர். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 88.  ஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் இல்லத்தில் அவர் உயிரிழந்தார். ஆல்-ரவுண்டரான அவர் இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

1,202 ரன்களை எடுத்துள்ளார். 1961-62 காலகட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியவர் துரானி. அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் கையில் கருப்பு நிற பேண்டை அணிந்து விளையாடினர். 

Images are subject to © copyright to their respective owners.

டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 8,545 ரன்களை எடுத்துள்ள சலீம் துரானி, 484 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவரது மறைவையடுத்து நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

IPL, SRH, RR

மற்ற செய்திகள்