'பந்து வீசுவதை நிறுத்திய பவுலர்!'.. ‘10 நிமிடம் நின்ற மேட்ச்’.. 4வது நாளும் இப்படியா? இந்தியா- ஆஸி போட்டியில் நடந்த ‘பரபரப்பு’ நிமிடங்கள்!.. ‘உடனடியாக எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது.
இதனை அடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் எனும் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி ஆடும்போதுதான் அந்த சர்ச்சைக்குரிய சம்பவம் இடையில் நடந்தது. ஆம், இனவெறி சர்ச்சையால் சிட்னியில் நடந்து வந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சுமார் 10 நிமிடம் நிறுத்தப்பட்ட சம்பவம் தான் அது.
முன்னதாக மூன்றாவது நாள் ஆட்டத்தில் பும்ரா பீல்டிங் செய்தபோது ரசிகர்கள் சிலர் முகமது சிராஜை கிண்டல் செய்தது சர்ச்சையை ஏறபடுத்திய நிலையில், தற்போது அதேபோல் நான்காவது நாள் ஆட்டத்திலும் இனவெறியை தூண்டும் வகையில் சில ரசிகர்கள் நடந்து கொண்டதாகவும், பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் வீரர் முகமது சிராஜ் இது தொடர்பான கவன ஈர்ப்புக்காக திடீரென பந்து வீசுவதை நிறுத்தியே விட்டார்.
இந்திய அணி கேப்டன் ரஹானே, முகமது சிராஜிடம் பேசிய பின்னர், நடுவர்களிடம் இந்த பிரச்சனையைக் கொண்டு சென்றார். இதனால் இனவெறி தூண்டும் வகையில் பேசிய பார்வையாளர்கள் 6 பேர் உடனடியாக மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சர்ச்சைக்குரிய வகையிலும், இனவெறியைத் தூண்டும் வகையிலும் நடந்துகொண்ட அந்த பார்வையாளர்கள் 6 பேர் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து டெஸ்ட் போட்டி மீண்டும் தொடங்கியது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இது குறித்து விளக்கமளித்தபோது, இவ்வாறு இனவெறியைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வதை ஏற்க முடியாது என்றும் இந்திய வீரர்களை குறிவைத்து இப்படி இனவெறியைத் தூண்டும் வகையில் செயலாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்திய அணிக்கு இது தொடர்பான தங்களது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளது. இந்திய வீரர்கள் உட்பட பல முன்னணி வீரர்கள் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்