'13 வருசமா இங்க விளையாடுறேன்' ... ஆனா எனக்கு தெரிஞ்ச 'தமிழ் வார்த்தை' இது தான் ... 'ஹர்பஜன்' வரிசையில் தமிழ் பேசும் 'சாவ்லா' !
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆண்டுகளாக சென்னையில் ஆடி வரும் நிலையில் தான் கற்றுக் கொண்ட மூன்று வார்த்தைகள் என்னென்ன என்பதை சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தினந்தோறும் தங்கள் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் பதிவிட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதில் பியூஷ் சாவ்லா, '13 ஆண்டுகளாக சென்னையில் போட்டிகளில் ஆடி வருகிறேன். ஆனால் நான் கற்றுக் கொண்ட மூன்று தமிழ் வார்த்தைகள் 'எப்படி இருக்கே' 'சூடு தண்ணி' 'சாப்டாச்சா' ஆகும் என பதிலளித்துள்ளார். சென்னை அணியில் 2018 ம் ஆண்டு இணைந்த சுழற்பந்து வீச்சாளர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழில் அதிகம் ட்வீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Courtesy : Chennai Super Kings (Twitter)
Epdi irukke? (How are you?)
Sudu thanni (Hot water)
Saaptaacha? (Have you eaten?) The 3 golden phrases in Thamizh that PC learnt in the last 13 years of playing in Chennai. 😄 #WhistlePodu pic.twitter.com/KZTXL1NnlQ
— Chennai Super Kings (@ChennaiIPL) March 10, 2020