'ஏற்கனவே மண்ட காயுது...' 'இப்படி'யெல்லாம் கூடவா 'பிரச்சனை' வரும்...? - 'பிரியாணி'யால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த நெருக்கடி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் செய்த காரியத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியில் உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். செப்டம்பர் 17-ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே போட்டி தொடங்குவதாக இருந்தது.
ராவல்பிண்டியில் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் லாகூரில் ஐந்து டி-20 போட்டிகள் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால்,நியூசிலாந்து வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தொடரில் விளையாடாமல் அவசர அவசரமாக நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினர்.
இதனால், கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் சிக்கலையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், பாகிஸ்தான் சென்ற நியூசிலாந்து வீரர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள செரினா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 5 எஸ்பிக்கள் உள்ளிட்ட 500 போலீசாரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பாகிஸ்தான் போலீசார் சுமார் 27 லட்ச ரூபாய்க்கு பிரியாணி மட்டும் சாப்பிட்ட பில்லை ஓட்டல் நிர்வாகம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினருக்கும், பாகிஸ்தான் நிதியமைச்சகத்துக்கும் அனுப்பியுள்ளது.
இதைப்பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், இந்த பில் தொகை இன்னும் ஓட்டல் நிர்வாகத்துக்கு கிளியர் ஆகவில்லை என கூறப்படுகிறது. இந்த பில்லில் பிரியாணி தவிர்த்து பிற உணவுகளில் பில் தொகை இதில் சேர்க்கப்படவில்லை என்றும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் போலீசார் மட்டுமல்லாது கமாண்டோ பிரிவினர், எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் நியூசிலாந்து வீரர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் இன்னும் அவர்களின் பில் சேர்க்கைப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்