'இந்தியாவை கொஞ்சம் டீல்ல விடுங்க'... 'இவங்க இரண்டு பேரும் தான் நம்ம துரோகிகள்'... 'T 20-ல வெளுத்து விடணும்'... பாகிஸ்தான் அணிக்கு வந்த உத்தரவு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தான் உடனான போட்டிகளை ரத்து செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த கிரிக்கெட் போட்டிகள் தற்போது மெல்ல மெல்ல நடைபெற ஆரம்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி சமீபத்தில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருந்தது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பிக்க இருக்கும் இந்த நேரத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறவிருந்த இந்த போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இதற்காக நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் வந்தது. ஆனால் முதல் ஒருநாள் போட்டி துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரை ரத்து செய்வதாகக் கூறியது.
கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நிலைகுலையச் செய்தது. இது ஒருபுறம் இருக்க இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்து பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான ரமீஸ் ராஜா, ''வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், நாம் இந்தியாவை மட்டுமே எதிரியாக நினைத்து இருந்தோம்.
ஆனால் இந்த பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இணைந்துள்ளன. நாம் எந்த தவறையும் செய்யாமல், நமக்குப் பெரிய துரோகத்தை இந்த இரு அணிகளும் செய்து விட்டார்கள். எனவே டி20 போட்டியில் ஆக்ரோஷமாக நாம் விளையாட வேண்டும். வெற்றி மட்டுமே நாம் ருசிக்க வேண்டும். இரண்டு துரோகிகளுக்கும் தக்க பாடத்தைப் புகட்ட வேண்டும்'' எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்