"பாவம் அவரே Confuse ஆயிட்டாரு.." கடுப்பான அர்ஷ்தீப்.. கைதட்டி சிரித்த ஹர்திக்.. "கடைசி நேரத்துல என்னங்க நடந்துச்சு??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரின் 48 ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மாற்றம் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது.

"பாவம் அவரே Confuse ஆயிட்டாரு.." கடுப்பான அர்ஷ்தீப்.. கைதட்டி சிரித்த ஹர்திக்.. "கடைசி நேரத்துல என்னங்க நடந்துச்சு??"

இந்த தொடரில், டாஸ் வென்று இரண்டாவது முறையாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

அதன்படி ஆடிய குஜராத் அணி, ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முன்னேற்றம் கண்ட பஞ்சாப்

இதனால், ரன் சேர்க்கவும் பெரிய அளவில் திணறியது குஜராத் அணி. மூன்றாவது வீரராக களமிறங்கிய இளம் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் மட்டும் ஒரு பக்கம் தனியாளாக நின்று ரன் அடித்துக் கொண்டே இருந்தார். கடைசி வரை களத்தில் நின்ற சுதர்சன், 65 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனால், குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் என ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோரையும் எட்டி இருந்தது. இதனையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே எளிதாக ஆடி ரன் சேர்த்தது.

pbks keeper jitesh sharma confuses to throw ball for run out

கடைசி கட்டத்தில், பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் என லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி காட்ட, 16 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி இருந்தது பஞ்சாப் கிங்ஸ். இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் அணி 5 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மறுபக்கம், 10 போட்டிகள் ஆடியுள்ள குஜராத் டைட்டன்ஸ், இரண்டாவது தோல்வி அடைந்து, தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

குழம்பிய ஜிதேஷ் ஷர்மா

இதனிடையே, போட்டிக்கு மத்தியில் ஒரு வீரர் குழம்பி போன வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இறுதி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இதன் கடைசி பந்தை எதிர்கொண்ட சாய் சுதர்ஷன், அதனை ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமல் போக, நேராக கீப்பர் ஜிதேஷ் ஷர்மா கைக்கு பந்து சென்றது.

pbks keeper jitesh sharma confuses to throw ball for run out

நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டாரு..

நான் ஸ்ட்ரைக்கர் பக்கம் நின்ற அல்சாரி ஜோசப் வேகமாக ரன் எடுக்க ஓடி வர, சாய் சுதர்ஷன் ஓடாமல் கிரீஸுக்குள் நின்றார். இதனால், இரு பேட்ஸ்மேன்களும் ஒரே திசையில் இருக்க, கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவுக்கு ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால், பந்துடன் வேகமாக ஓடி வந்த ஜிதேஷ், பந்தை எங்கே வீசுவது என குழம்பி, இரு பக்கமும் பந்தினை எறிய முயற்சி செய்தார். முதலில் ஒரு பக்கமும், அடுத்து மறுபக்கமும் வீச முயற்சித்து, கையிலேயே பந்தை வைத்திருந்தார்.

 

இதற்குள், குஜராத் அணி வீரர்கள் ரன் ஓடி விட்டனர். ஜிதேஷ் செயலைக் கண்டு, அர்ஷ்தீப் சிங் மற்றும் பஞ்சாப் அணியினர் அதிருப்தி அடைந்தனர். ஆனால், இதனைக் கண்ட ஹர்திக் பாண்டியா சிரித்த படி இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

HARDIKPANDYA, ARSHDEEP SINGH, JITESH SHARMA, GT VS PBKS, ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங்

மற்ற செய்திகள்