"ச்சே,, நான் அப்டி பண்ணி இருக்கக் கூடாது.." 'தோல்வி'க்கு பின் வருத்தத்தில் 'கம்மின்ஸ்' சொன்ன 'விஷயம்'.. உடைந்து போன 'ரசிகர்கள்'.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த சென்னை அணி, 220 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 31 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், சென்னை அணி எளிதில் வெற்றி பெறும் என்றே அனைவரும் கருதினர்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ரசல், தினேஷ் கார்த்திக் மற்றும் கம்மின்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், சென்னை அணி கதிகலங்கிப் போனது. ஆனாலும், கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி வந்த கொல்கத்தா, இறுதியில் விக்கெட்டுகளை இழந்ததால், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய நேரிட்டது. கடைசி வரை களத்தில் நின்ற கம்மின்ஸ் (Cummins), 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்திருந்தார். இதில், சாம் குர்ரான் வீசிய ஒரே ஓவரில், 30 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார் கம்மின்ஸ்.
போட்டியில் தோல்வி அடைந்தாலும், கை விட்டுச் சென்ற போட்டியை, மீண்டும் போராடி, தங்களது பக்கம் கொண்டு வர, கொல்கத்தா வீரர்கள் போராடியது, அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில், போட்டிக்கு பிறகு கொல்கத்தா அணி, தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில், தோல்விக்கு பிறகு அந்த அணி வீரர்கள், டிரெஸ்ஸிங் ரூமில் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி அந்த வீடியோவில் காட்டப்பட்டது. அப்போது, கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் (Morgan), கம்மின்ஸிடம், 'நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள்' என கூறினார். அதன் பிறகு பேசிய கம்மின்ஸ், 'மிகவும் நெருக்கமாக வந்து வெற்றி வாய்ப்பைத் தவற விட்டோம். ரசல் நம்ப முடியாத வகையில் ஆடினார்' என்றார்.
தொடர்ந்து, "இதனால் நீங்கள் மனமுடைந்து விட்டீர்களா?" என மீண்டும் கம்மின்ஸிடம், மோர்கன் கேள்வி எழுப்பினார். இதற்கு மிகவும் வருத்தத்துடன் பதில் சொன்ன கம்மின்ஸ், 'ஆம். பந்து வீச்சில் நிறைய ரன்கள் கொடுத்து விட்டேன். ஒரு ஓவர் நன்றாக வீசியிருந்தால், நாம் வெற்றி பெற்றிருக்கலாம். இது கிரிக்கெட் அல்லவா இப்படி தான் இருக்கும்' என கம்மின்ஸ் தான் செய்த தவறு பற்றி, ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 4 ஓவர்கள் பந்து வீசிய கம்மின்ஸ், விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல், 58 ரன்கள் வாரி வழங்கினார். அதனைத் தான், போட்டிக்கு பிறகு அவர் சற்று உடைந்த மனதுடன் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்த போட்டியை, போராடி வெற்றிப் பாதைக்கு அருகே கொண்டு வந்து, கொல்கத்தா அணி கோட்டை விட்ட நிலையில், கம்மின்ஸின் வார்த்தைகளால், கிரிக்கெட் ரசிகர்களும் சற்று கலங்கிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்