‘ஐபிஎல் வரலாற்றிலேயே’.. ‘அதிக விலைக்கு ஏலம் போன வீரர்’!.. ‘மொத்த டீமையும் திரும்பி பாக்க வச்ச ஒத்த டீம்’..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை அதிக விலை கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் டி20 தொடரின் 13-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு வீரர்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மன்ஸ் சிறந்த பார்மில் இருந்து வருகிறார். அதனால் அவரை ஏலத்தில் எடுக்க டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த இரு அணிகளும் 15 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டது. அப்போது திடீரென உள்ளே வந்த கொல்கத்தா அணி 15.50 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
So @patcummins30 is coming back home to KKR! 👋
Aussie speedster is now the costliest overseas buy in IPL history! 😁💜 #IPLAuction #KorboLorboJeetbo #IPL2020 pic.twitter.com/j6OIPAey2L
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2019