இந்தியா ஸ்கோர் என்ன?.. தவித்த பயணி.. விஷயம் கேள்விப்பட்டு விமானி கொடுத்த ரிப்ளை.. வைரல் Pic..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி இருந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மேட்சின் ஸ்கோர் பற்றி அறிய முயற்சி செய்த பயணி ஒருவருக்கு விமானி உதவியுள்ளார்.

இந்தியா ஸ்கோர் என்ன?.. தவித்த பயணி.. விஷயம் கேள்விப்பட்டு விமானி கொடுத்த ரிப்ளை.. வைரல் Pic..!

Also Read | நிறைந்து வழிந்த திருப்பதி உண்டியல்.. பணத்தை எண்ணியே டயர்டு ஆன அதிகாரிகள்.. கடைசி 10 மாத வருமான இவ்ளோவா..?

T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்று போட்டிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த விறுவிறுப்பு தற்போதே அதிகரித்துள்ளது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி குரூப் 2 வில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்தித்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

Passenger Gets Handwritten Ind vs SA Score Update From Pilot

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தனர். இருவரும் அரை சதமடித்திருந்த நிலையில், இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை தென் ஆப்பிரிக்க அணி எட்டிப் பிடித்திருந்தது.

இந்நிலையில், இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இண்டிகோ விமானத்தில் பயணம் செய்திருக்கிறார் விக்ரம் கார்கா என்னும் ரசிகர். அவருக்கு மேட்சின் ஸ்கோர் நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் எழுந்தது. இதுபற்றி அவர் அருகில் இருந்தவர்களிடம் பேசியதாக தெரிகிறது. அப்போது, அந்த விமானத்தின் பைலட் ஒரு tissue பேப்பரில் ஸ்கோர் நிலவரத்தை எழுதி விக்ரமிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

 

அந்த பேப்பரில் "SA 33/03, 6 overs, IND 133/9" என விமானி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விமானியின் இந்த செயலை பாராட்டியுள்ளார். மேலும் அந்த பேப்பரின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,"இந்தியா இன்று தோற்றது. ஆனால் இண்டிகோ விமானம் என் இதயத்தை வென்றது. ஸ்கோர் அப்டேட் கேட்டபோது விமானி நடுவானில் ஒரு குறிப்பை எனக்கு அனுப்பினார்" என எழுதியுள்ளார். இந்நிலையில், இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | 'கண்டிப்பா வந்துருங்க' தாம்பூல தட்டுடன் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்த கவுன்சிலர்.. இதுதான் விஷயமா..? வைரல் வீடியோ..!

CRICKET, IND VS SA, T20 WORLD CUP, FLIGHT, PASSENGER, PILOT

மற்ற செய்திகள்