Video : 'லட்டு' மாதிரி வந்த 'சான்ஸ்'யா... கடுப்பாகி தலையில் அடித்துக் கொண்ட 'அஸ்வின்'... பரபரப்பு 'வீடியோ'.. நடந்தது என்ன??..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

Video : 'லட்டு' மாதிரி வந்த 'சான்ஸ்'யா... கடுப்பாகி தலையில் அடித்துக் கொண்ட 'அஸ்வின்'... பரபரப்பு 'வீடியோ'.. நடந்தது என்ன??..

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 578 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அதன் பிறகு ஆடிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா ஆகியோர் ஓரளவு அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 88 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து அவுட்டானார். புஜாரா 73 ரன்கள் எடுத்திருந்தார். முன்னதாக, இன்று காலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அஸ்வின் வீசிய பந்தை எதிர்கொண்ட ஜேக் லீச், கிரீஸை விட்டு வெளியே வந்து அடிக்க முயற்சித்த நிலையில், பந்து அவரைத் தாண்டி, கீப்பர் ரிஷப் பண்ட் கையை நோக்கிச் சென்றது.

ஜேக்கை ஸ்டம்பிங் செய்ய எளிய வாய்ப்பு கிடைத்த போதும், பண்ட் பந்தைத் தவற விட்டார். இதனைக் கண்டதும் கடுப்பான அஸ்வின், தனது தலையிலேயே கையால் அடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய தொடரிலும், கீப்பிங்கில் இதே போன்று நிறைய வாய்ப்புகளைக் பண்ட் கோட்டை விட்டிருந்தார். ஆனால், மறுபக்கம் பேட்டிங்கில் அதிரடியாக ஆடி, இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லவும் உதவியிருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிய பண்ட், கீப்பிங்கில் எளிதான வாய்ப்புகளைத் தவற விட்டு வருகிறார். தற்போதைய இந்திய அணிக்கு, பேட்டிங்கில் பக்க பலமாக இருக்கும் பண்ட், கீப்பிங்கில் இன்னும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்