‘அப்பா பிசினஸ் லாஸ்’!.. ‘ஹர்திக் அப்போ சின்ன பையன்’.. க்ருணால் கண்ணீருக்கு பின் இருக்கும் யாரும் அறியாத சோகக்கதை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிறுவயதில் க்ருணால் பாண்ட்யா எப்படி கஷ்டப்பட்டார் என அவரது பயிற்சியாளர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.

‘அப்பா பிசினஸ் லாஸ்’!.. ‘ஹர்திக் அப்போ சின்ன பையன்’.. க்ருணால் கண்ணீருக்கு பின் இருக்கும் யாரும் அறியாத சோகக்கதை..!

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் அண்ணன் க்ருணால் பாண்ட்யா அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். போட்டி ஆரம்பிக்கும் முன்னர், தனது சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து இந்திய அணியின் தொப்பியை வாங்கியதும் க்ருணால் பாண்ட்யா கண் கலங்கினார்.

Pandya brother's coach reveals their late father’s concern

இதனை அடுத்து நடைபெற்ற போட்டியில் 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து க்ருணால் பாண்ட்யா அசத்தினார். அறிமுகமான முதல் போட்டியிலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதனைத் தொடர்ந்து போட்டி முடிந்த பின் அவரிடம் பேட்டி காணப்பட்டது. அப்போது மறைந்த தனது தந்தையை நினைத்து கண்ணீர் சிந்திய க்ருணால் பாண்ட்யா, இந்த அரைசதத்தை தன் தந்தை சமர்பிப்பதாக கூறினார்.

Pandya brother's coach reveals their late father’s concern

இந்த நிலையில் சிறுவயதில் பாண்ட்யா சகோதரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஜிதேந்திரா, க்ருணால் பாண்ட்யாவின் இளமை காலம் எவ்வாறு இருந்தது என தெரிவித்துள்ளார்.

Pandya brother's coach reveals their late father’s concern

இதுகுறித்து Indian Express சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘க்ருணால் பாண்ட்யாவின் தந்தை ஹிமான்ஷு பாண்ட்யாவுக்கு பிசினஸில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் முதல்முறையாக ஹிமான்ஷு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் க்ருணால் பாண்டாவின் கனவாக இருந்தது. அப்போது ஹர்திக் சின்ன பையன். க்ருணால் மூத்த பையனாக இருந்ததால் குடும்ப சுமையை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குடும்பத்தில் வருமானம் இல்லாமல் தவித்த, க்ருணால் பாண்ட்யாவால் பயிற்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. அதிலிருந்து அவருக்கு சரிவு ஏற்பட்டது. நான் பெரிய பையனாக வளர்ந்ததும் வழக்கமான வேலைக்குதான் செல்வேனோ? என கவலை பட்டுக்கொண்டிருந்தார்’ என பயிற்சியாளர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.

Pandya brother's coach reveals their late father’s concern

தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் ஜிதேந்திரா, ‘உண்மையை சொல்லுங்க, க்ருணால் கண்டிப்பாக இந்திய அணிக்காக விளையாடுவானா? என அவரது தந்தை என்னிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பார். க்ருணால் எப்படியாவது இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே அவரது கனவாகவும், கவலையாகவும் இருந்தது. அதுதான் தனது அறிமுக போட்டியில் க்ருணால் கண் கலங்க காரணம்’ என தெரிவித்தார். பாண்ட்யா சகோதரர்களின் தந்தை ஹிமான்ஷு பாண்ட்யா கடந்த ஜனவரி மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்