'உலககோப்பை'யில எங்கள சாதாரணமாக நினைக்காதீங்க'... நாங்க 'திடீர்னு அட்டாக்' பண்ணுவோம் !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில்,ஆப்கானிஸ்தான் அணி பெற்றிருக்கும் வெற்றி எங்களை சாதாரணமாக எடை போட வேண்டாம் என எச்சரிப்பது போன்று அமைந்துள்ளது.

'உலககோப்பை'யில எங்கள சாதாரணமாக நினைக்காதீங்க'... நாங்க 'திடீர்னு அட்டாக்' பண்ணுவோம் !

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.அதன் முன்னோட்டமாக,உலககோப்பையில் இடம் பெற்றிருக்கும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில் நேற்று நடந்த ஒரு பயிற்சி ஆட்டத்தில்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக அமைந்திருந்தது.ஆனால் ஆப்கானிஸ்தான் பௌலர்களின் பந்துவீச்சு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை மிரள செய்தது.

இதையடுத்து பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 262 ரன்கள் எடுத்தது.பாகிஸ்தான் தரப்பில் பாபர் ஆஸம் 108 பந்துகளில் 112 ரன் குவித்தார். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 44 ரன் எடுத்தார்.மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனிடையே ஆப்கான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டும் ரஷித்கான், தவ்லத் ஸத்ரன் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள்.

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 263 ரன் எடுத்து வெற்றி பெற்றது.அந்த அணியின் ஹஸ்மத்துல்லா ஷாகிதி 74 ரன் எடுத்து அசத்தினார்.ஹஸ்ரத்துல்லா ஸஸாய் 49 ரன்னும் முகமது நபி 34 ரன்னும் எடுத்தனர்.பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ் 3 விக்கெட்டும், இமாத் வாசிம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதனிடையே ஆப்கான் அணியின் அதிரடி வீரர் முகமது ஷாசத்  தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, WORLDCUPINENGLAND, PAKISTAN, WORLD CUP WARM-UP MATCH, AFGHANISTAN