பாகிஸ்தான் வீரரிடம் பஞ்சாயத்து பண்ண பார்த்த கோலி.. "தோனி வந்ததுனால".. பழைய விஷயத்தை கிளறிய முன்னாள் வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரில் விளையாடி இருந்தது. இந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி வென்று அசத்தி இருந்தது.

பாகிஸ்தான் வீரரிடம் பஞ்சாயத்து பண்ண பார்த்த கோலி.. "தோனி வந்ததுனால".. பழைய விஷயத்தை கிளறிய முன்னாள் வீரர்!!

                                                                                                              Images are subject to © copyright to their respective owners

இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரும் நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் முன்னேற முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்களும் தீவிரமாக தயாராக உள்ளனர்.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீர்ர் கூறியுள்ள கருத்து, அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள், 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை தொடரில் மோதி இருந்தது. இந்த போட்டியில் விராட் கோலி சதமடிக்க, ரெய்னா மற்றும் தவான் ஆகியோர் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் சொஹைல் கான் 5 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

Pakistan Former cricket player about virat kohli sledging

Images are subject to © copyright to their respective owners

இந்நிலையில், இந்த போட்டிக்கு இடையே கோலியுடன் நடந்த வாக்குவாதம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சொஹைல் கான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். "நான் பேட்டிங் செய்ய வந்த போது கோலி என்னிடம் வந்து, 'நீங்கள் இப்போது வந்துவிட்டு அதிகமாக பேசுகிறீர்கள்' என கூறினார். நான் 2006 - 07 இல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி விளையாடினேன். அப்போது முழங்கால் காயத்தால் நீண்ட காலம் விளையாட முடியாமல் போனது.

Pakistan Former cricket player about virat kohli sledging

Images are subject to © copyright to their respective owners

கோலி அப்படி கூறியதும், 'நீங்கள் இந்திய அணிக்காக U 19 போட்டிகளில் ஆடிய போது நான் டெஸ்ட் வீரராக விளையாடி உள்ளேன்' என கூறினேன். அப்போது மிஸ்பா என்னிடம் கோபப்பட்டு அமைதியாக இருக்கும்படி கூறினார். அதன் பின்னர் அங்கே வந்த எம்.எஸ். தோனி, 'அமைதியாக இருங்கள். அவர் அனுபவம் வாய்ந்தவர். அவரை பற்றி உங்களுக்கு தெரியாது' என கோலியிடம் கூறி அழைத்து சென்றார்" என முன்பு நடந்த  விஷயம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சொஹைல் கான் தற்போது பேசி உள்ளார்.

MSDHONI, VIRATKOHLI, SOHAIL KHAN

மற்ற செய்திகள்