Viruman Mobiile Logo top

நீரஜ் சோப்ராவா..ஆஷிஷ் நெஹ்ராவா..?.. பாகிஸ்தானை சேர்ந்தவரின் துடுக்கான பதிவு.. சேவாக் போட்ட 'தெறி' கமெண்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக ஆஷிஷ் நெஹ்ரா என குறிப்பிட்டு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் பதிவு ஒன்றை பகிர, அதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் போட்ட கமெண்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நீரஜ் சோப்ராவா..ஆஷிஷ் நெஹ்ராவா..?.. பாகிஸ்தானை சேர்ந்தவரின் துடுக்கான பதிவு.. சேவாக் போட்ட 'தெறி' கமெண்ட்..!

Also Read | "இப்படி ஒரு சம்பவத்தை நாங்க கேள்விப்பட்டதில்ல".. பீச்-ல வாக்கிங் போனவர் பார்த்த பயங்கர காட்சி.. விசாரணையில் குழம்பிப்போன அதிகாரிகள்..!

அர்ஷத் நதீம்

இங்கிலாந்தின் பெர்மிங்காமில் நடைபெற்றுவந்த ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை வென்றார். 91.8 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி புதிய சாதனையையும் அர்ஷத் நிகழ்த்தியிருக்கிறார். காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எரிதலில் பாகிஸ்தான் பெறும் முதல் தங்கம் இதுவாகும். இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஷத்,"கடவுளின் அருளாலும், உங்கள் பிரார்த்தனையாலும் நான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று 91.18 மீ என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, அர்ஷத்தின் பதிவில் கமெண்ட் செய்திருந்தார். அதில்,"தங்கம் வென்ற அர்ஷத் பாய்க்கு வாழ்த்துக்கள். மேலும், 90 மீட்டர் என்ற சாதனையை படைத்ததற்கும் எதிர்கால போட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்" என கமெண்ட் செய்திருந்தார்.

Pak man mistakes Neeraj Chopra for Ashish Nehra Sehwag reacts

வைரலான பதிவு

இந்நிலையில், பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் சையத் ஜமான் ஹமீத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அர்ஷத்தை பாராட்டிய அவர்,"இந்த வெற்றியின் சிறப்பு என்னவென்றால் பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத், இந்தியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரரான ஆஷிஷ் நெஹ்ராவை தோற்கடித்தது தான். கடந்த போட்டியில் ஆஷிஷ், நதீமை தோற்கடித்திருந்தார். ஸ்வீட் ரிவெஞ்ச் இது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவை அவர் தவறுதலாக குறிப்பிட பலரும் இதனை சுட்டிக்காட்டி வந்தனர். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக இந்த வருட காமன்வெல்த் போட்டியிலேயே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சேவாக் போட்ட கமெண்ட்

ஹமீத்-ன் இந்த பிழையான பதிவு வைரலாகவே இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் இந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். அதில்," ஆஷிஷ் நெஹ்ரா தற்போது பிரிட்டனில் நடைபெறும் பிரதமர் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். ஆகவே பொறுமையுடன் இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கமெண்ட் தற்போது வைரலாகி வருகிறது.

 

Also Read | கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காதல் கடிதம்.. திறந்து பார்த்தப்போ உள்ள இருந்த ரகசிய செய்தி.. ஷாக் ஆகிப்போன இளம்பெண்..!

NEERAJ CHOPRA, ASHISH NEHRA, SEHWAG, நீரஜ் சோப்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, சேவாக்

மற்ற செய்திகள்