Oh My Dog
Anantham Mobile

‘களேபரம் ஆன DC vs RR மேட்ச்’.. ரிஷப் பந்த் உட்பட 3 பேர் மீது பாய்ந்த நடவடிக்கை.. IPL நிர்வாகம் அதிரடி ஆக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கோபமாக நடந்துகொண்டதைக் கண்டித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

‘களேபரம் ஆன DC vs RR மேட்ச்’.. ரிஷப் பந்த் உட்பட 3 பேர் மீது பாய்ந்த நடவடிக்கை.. IPL நிர்வாகம் அதிரடி ஆக்‌ஷன்..!

ரிஷப் பந்த் (Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும், சஞ்சு சாம்சன் (Sanju Samson) தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Over No-ball controversy DC captain Rishabh Pant fined

இப்போட்டியில் கடைசி ஓவரில் 36 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் டெல்லி அணி இருந்தது. அப்போது களத்தில் ரோமன் பாவெல் (Rovman Powell) மற்றும் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) களத்தில் இருந்தனர். அதில் ராஜஸ்தான் அணியின் மெக்காய் ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ரோமன் பாவெல் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மெக்காய் 3-வது பந்தை ஃபுல்டாஸாக ரோமன் பாவெல் இடுப்பு உயரத்துக்கு வீசினார். அதையும் அவர் சிக்சருக்கு பறக்கவிட்டார்.

இதனை அடுத்து இடுப்புவரை வீசப்பட்டதால் இதற்கு கள அம்பயர் நிதின் மேனனிடம் ரோமன் பாவெல் நோ-பால் கோரினார். ஆனால் அம்பயர் நோபால் தரவில்லை. உடனே டக் அவுட்டில் அமர்ந்திருந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ஷர்துல் தாகூர் (Shardul Thakur) என பலரும் அம்பயரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தனர். பந்து இடுப்பு மேல் செல்லவில்லை எனக் கூறி நோபால் தரமுடியாது அம்பயர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

Over No-ball controversy DC captain Rishabh Pant fined

இதனால் சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் ரிஷப் பந்த், களத்தில் இருந்த ரோமென் பாவல் மற்றும் குல்தீப் யாதவை விளையாடியது போதும் திரும்ப வாருங்கள் என சைகையால் பெவிலியனுக்கு அழைத்தார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது டெல்லி அணியின் மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் ரிஷப் பந்தை சமாதானம் செய்து அமர வைத்தனர். இதனிடையே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பிரவிண் ஆம்ரே (Pravin Amre) சென்று அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவம் ஐபிஎல் தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம், போட்டி ஊதியத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. மேலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி அணியின் துணைப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டி ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமும், ஒரு போட்டியில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

RISHABHPANT, IPL, DCVSRR, IPL2022, PRAVINAMRE

மற்ற செய்திகள்