"ஒரு 'மேட்ச்'ல நல்லா பண்ணிட்டா அவரு 'பெஸ்ட்' ஆகிட முடியுமா??..." ஊரே பாராட்டும் 'இந்திய' வீரர்... "ஆனா 'வாகன்' மட்டும் தனியா ஒண்ணு சொல்றாரு!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

"ஒரு 'மேட்ச்'ல நல்லா பண்ணிட்டா அவரு 'பெஸ்ட்' ஆகிட முடியுமா??..." ஊரே பாராட்டும் 'இந்திய' வீரர்... "ஆனா 'வாகன்' மட்டும் தனியா ஒண்ணு சொல்றாரு!!"

இதுவரை நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறார். முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். பேட்டிங்கில் தொடர்ந்து ஜொலித்து வரும் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய தொடரில் கீப்பிங்கில் மோசமாக செயல்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல முன்னாள் வீரர்கள் பண்ட் கீப்பிங்கில் இன்னும் மேம்பட வேண்டி, அவருக்கு அறிவுரை வழங்கினர். அதன் பின்னர், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் மிகவும் சிறப்பாக கீப்பிங் செய்து வருகிறார். குறிப்பாக, இரண்டாவது போட்டியில், அசத்தல் கீப்பிங் திறனை வெளிப்படுத்தியிருந்தார். முதல் இன்னிங்ஸில் ஒற்றை கை கேட்ச் ஒன்றை பிடித்த பண்ட், சில சிறப்பான ஸ்டம்பிங்களையும் செய்திருந்தார்.

கீப்பிங்கில் தனது திறனை மேம்படுத்தி வரும் ரிஷப் பன்டிற்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தற்போது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய மைக்கேல் வாகன், 'ஒரு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக கீப்பிங் செய்வதன் மூலம் ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர் ஆகி விட முடியாது. எப்போதும் பந்தினை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு போட்டியில் செய்ததை போன்று தொடர்ந்து பல போட்டிகளில் அவர் செய்தால் தான், தன்னை ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை பண்ட் நிரூபிக்க முடியும்' என வாகன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்