'உங்க முடிவுல எங்க 'இதயமே நொறுங்கி போச்சு'...'வீரரின் உருக்கமான ட்வீட்'... ஆறுதல் சொன்ன அஸ்வின்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜிம்பாப்வே அணி நீக்கம் செய்யப்பட்டத்தை அடுத்து, ஜிம்பாப்வே வீரர் பதிவிட்டுள்ள ட்வீட் பலரையும் நெகிழச் செய்துள்ளது. அதற்கு இந்திய வீரர் அஸ்வின் ஆறுதல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளை மீறி ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் செயல்படுவதாக ஐசிசிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து நேற்று லண்டனில் ஐசிசியின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் இறுதியில் ஐசிசி விதிகளை மீறி செயல்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஐசிசி தலைவர் ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார். ஐசிசியின் நடவடிக்கை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தங்களது அணி மீதான தடை குறித்து ஜிம்பாப்வே அணியின் வீரர் சிக்கந்தர் ரஸா உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் "எப்படி ஒரு முடிவு அணியினரை அந்நியர்கள் ஆக்கியுள்ளது, எப்படி ஒரு முடிவு பலரை வேலை இல்லாதவர்களாக மாற்றியுள்ளது, எப்படி ஒரு முடிவு பல குடும்பங்களை பாதித்துள்ளது, எப்படி ஒரு முடிவு பலரின் வாழ்க்கையை சீரழத்துள்ளது, இப்படி ஒரு தருணத்தில் நான் சர்வதேச போட்டிகளை விட்டு விலகுவேன் என நினைக்கவில்லை'' என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய வீரர் அஸ்வின் இது 'ஹார்ட் பிரேக்கிங்' என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரஸாவின் உருக்கமான பதிவு குறித்து தெரிவித்துள்ள அஸ்வின் ''கிரிக்கெட் அவர்களின் வாழ்க்கையில் இல்லை என்றால் வீரர்களின் நிலை என்னவென்பது ரஸாவின் பதிவு உணர்த்துகிறது. நீங்கள் மீண்டு வர நான் பிராத்தனை செய்கிறேன். விரைவில் நீங்கள் மீண்டு வருவீர்கள்'' என அஸ்வின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜிம்பாப்வே அணியில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, ஐசிசி அந்த அணியை இடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
How one decision has made a team , strangers
How one decision has made so many people unemployed
How one decision effect so many families
How one decision has ended so many careers
Certainly not how I wanted to say goodbye to international cricket. @ICC pic.twitter.com/lEW02Qakwx
— Sikandar Raza (@SRazaB24) July 18, 2019
Extremely heart breaking news for all Zim cricketers and their fans, reading the tweets of @SRazaB24 just shows the agony of cricketers and how their life’s have been taken away from them. I pray that the lovely cricket nation returns to its glory asap! #ZimbabweCricket
— Ashwin Ravichandran (@ashwinravi99) July 19, 2019