‘இது என்ன புது என்ட்ரியா இருக்கு’!.. டி20 உலகக்கோப்பையை நடத்த திடீரென ‘ஆர்வம்’ காட்டும் நாடு.. பிசிசிஐக்கு எழுந்த சிக்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரை தங்கள் நாட்டில் நடத்த பிசிசிஐயிடம் ஓமன் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘இது என்ன புது என்ட்ரியா இருக்கு’!.. டி20 உலகக்கோப்பையை நடத்த திடீரென ‘ஆர்வம்’ காட்டும் நாடு.. பிசிசிஐக்கு எழுந்த சிக்கல்..!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த உள்ளதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Oman Cricket approaches BCCI to host T20 World Cup 2021

முன்னதாக இந்தியாவில் டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், உலகக்கோப்பை தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என ஐசிசியிடம் பிசிசிஐ வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்ற ஐசிசி, வரும் 28-ம் தேதிக்குள் ஆலோசனை மேற்கொண்டு முடிவை தெரிவிக்க வேண்டும் என கூறியது.

Oman Cricket approaches BCCI to host T20 World Cup 2021

இதனிடையே டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க ஐசிசி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தொடக்க சுற்று ஆட்டங்களை நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Oman Cricket approaches BCCI to host T20 World Cup 2021

இந்த நிலையில் Times of India ஊடகத்துக்கு பேட்டியளித்த ஓமன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பங்கஜ் கிம்தி (Pankaj Khimji), ‘டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துமாறு ஐசிசி எங்களை அணுகியது. நாங்கள் இதுதொடர்பாக பிசிசியிடம் கலந்தாலோசித்து வருகிறோம். ஐசிசி சில தரவுகளை எங்களிடம் கேட்டது. அதனை நாங்கள் இப்போது கொடுத்துள்ளோம். ஓமனில் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன’ என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடத்துவது தொடர்பாக ஐசிசியிடம் பிசிசிஐ அவகாசம் கேட்டுள்ள நிலையில், ஓமன் நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் கூறிய தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்