இவங்கள 'யாரு'னு தெரியுதா...? அன்னைக்கு 'ரெட் கார்பெட்' வச்சு வெல்கம் பண்ணினாங்க...! 'ஊரே பெருமையா பார்த்துச்சு...' - தற்போதைய 'துயர' நிலையை நினைத்து வேதனை...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் ஜோதி ஏந்திய ஒருவர், ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவங்கள 'யாரு'னு தெரியுதா...? அன்னைக்கு 'ரெட் கார்பெட்' வச்சு வெல்கம் பண்ணினாங்க...! 'ஊரே பெருமையா பார்த்துச்சு...' - தற்போதைய 'துயர' நிலையை நினைத்து வேதனை...!

அசாம் மாநிலத்தின் பின் தங்கிய மாவட்டம் திப்ருகார். இந்த மாவட்டத்தில் இருந்து தான் பலர் தற்போது தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு வருகின்றனர்.

அதோடு, இந்த மாவட்டத்தை சேர்ந்த பிங்கி கர்மாகர் என்பவர் தான் கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் ஜோதி எந்தியவர். ஜோதி ஏந்தியபின்  இந்தியா வந்த போது அவருக்கு மேள தாளத்துடன், சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Olympic torchbearer is now a daily wage earner tea garden

இவர் ஒலிம்பிக் ஜோதி ஏந்தியதில் அவரது ஊர் மக்களே சந்தோஷத்தில் திளைத்தனர். ஆனால், தற்போது பிங்கி கர்மாகர் தன் திப்ருகார் மாவட்டத்தின் பார்பூரா டீ எஸ்டேட்டில் ரூ.167 தினக்கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தார், தற்போது, திருத்தப்பட்ட கூலியாக ரூ.205 பெறுகிறார்.

இதுகுறித்து கூறும் கர்மாகர், 'நான் பார்பூரா டீ எஸ்டேட்டில் தினக் கூலியாக பணியாற்றி வருகிறேன். ஒலிம்பிக் ஜோதி ஏந்தியவர்களுக்கு தினசரி ஏதோ பணம் தருவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கு இதுவரை ஏதும் கிடைக்கவில்லை.

Olympic torchbearer is now a daily wage earner tea garden

கடந்த 9-10 ஆண்டுகளாக கஷ்டத்தில் தான் இருக்கிறேன். என்னை தெரிந்த மக்களோ ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்டு தினமும் என்னை கஷ்டப்படுத்தி வருகின்றனர்.

நான் இப்போது பட்டப்படிப்பு படிக்கிறேன். இங்கும் பணம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எந்த ஒரு தரப்பிலிருந்தும் எனக்கு உதவியில்லை.

Olympic torchbearer is now a daily wage earner tea garden

ஒரு சில நேரங்களில் அசாம் தேயிலை சமூகத்திலிருந்து வந்ததுதான் என் நிலைமைக்குக் காரணமோ என்று கூட நினைக்கிறேன்

எனக்கு வில்வித்தையில் பெரிய வீரராக உருவாக வேண்டும். நான் ஒரு இரவு பள்ளியை நடத்தி வருகிறேன். லண்டன் ஒலிம்பிக் டார்ச் ஏந்திய நினைவுகளுடனேயே சமூக நல செயல்களை செய்து வருகிறேன்' என வேதனையுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்