VIDEO: ஒலிம்பிக்கில் அதிர்ச்சி சம்பவம்!.. சக போட்டியாளர்களுக்கு கிடைக்கவிடாமல்... தண்ணீர் பாட்டில்களை தட்டிவிட்ட மாரத்தான் வீரர்!.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் குடிநீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 26 மைல் தூரம் கொண்ட மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மோர்ஹட் அம்டவுனி என்பவரும் 14 வது நபராக ஓடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், வீரர்களுக்கு குடிப்பதற்காக சாலையோரத்தில் குடிநீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில வீரர்கள் குடிப்பதற்கு பாட்டில்களை எடுத்த போது, ஃபிரான்ஸ் வீரர் மட்டும் பாட்டில்களைத் தட்டி விட்டார்.
இதனால் பின்னால் வந்த மற்ற வீரர்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடினர். மோர்ஹட்டின் இந்தச் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.
Thoughts on Amdouni knocking over an entire row of water before taking the last one? pic.twitter.com/qrPaSzxLBW
— Ben St Lawrence (@bennysaint) August 8, 2021
மற்ற செய்திகள்