'இப்போ சொல்ல வேண்டாம்...' 'விளையாட்டு முடிஞ்சு வரட்டும்...' - 'விஷயத்தை' கேள்விப்பட்டு உடைந்து கதறிய 'ஒலிம்பிக்' வீராங்கனை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட தமிழக விராங்கனை தனலட்சுமி விமான நிலையத்தில் மனம் உடைந்து அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2021-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதில் கலந்துக்கொள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி என்பவரும் சென்றுள்ளார்.
திருச்சி குண்டூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி, சிறந்த தமிழக தடகள வீராங்கனை. இதற்கு முன் பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு தேர்வாகி இருந்த தனலட்சுமி டோக்கியோ சென்றுள்ளார். அந்த சமயம் கடந்த ஜூன் 12-ஆம் தேதி தனலட்சுமியின் அக்கா தீடீரென உயிரிழந்துள்ளார்.
ஆனால், தனலட்சுமி வீட்டார் யாரும் இதை அவருக்கு தெரிவிக்கவில்லை. இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால் அவரால் தாங்க முடியாமல் விளையாட்டுப் போட்டியிலிருந்து கவனம் சிதறி விடுவார் என அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் யாரும் தெரியப்படுத்தாமல் இருந்துவிட்டனர்.
தற்போது போட்டி முடிந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பிய தனலட்சுமி, அங்கே வரவேற்க அக்கா ஏன் வரவில்லை எனக் கேட்டுள்ளார். அப்போதுதான் அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை கேட்ட தனலட்சுமி விமான நிலையத்திலேயே நிலைகுலைந்து அழுத சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், குடும்பத்தினரும் உறவினர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றி, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
மற்ற செய்திகள்