71 ஆவது Century அடித்த கோலி.. உடனே மைதானத்தில் இருந்த வயதான ரசிகர் செய்த காரியம்.. இணையத்தை வென்ற வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆசிய கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், விராட் கோலி அடித்த சதம் குறித்து தான் தற்போது இணையம் முழுக்க பேச்சு நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு சர்வதேச சதம் கூட கோலி அடிக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, ஆசிய கோப்பைக்கு முந்தைய சில தொடர்களில், கோலியின் பேட்டிங்கும் கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது.
இதனால், டி 20 உலக கோப்பையில் கோலியின் இடம் குறித்து பலரும் பல விதமான விமர்சனங்களை உருவாக்கி இருந்தனர்.
இனிமேல் பழைய ஃபார்முக்கு கோலி திரும்புவாரா என்றும் ஏராளமானோர் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆசிய கோப்பைக்கு முன்பு நடந்த ஒன்றிரண்டு தொடர்களில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் தீவிர பயிற்சியிலும் இறங்கி இருந்தார் விராட் கோலி. இதனால், ஆசிய கோப்பையில் நிச்சயம் அவர் தனது திறனை நிரூபிப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்து வந்தனர்.
அதனை நிஜமாக்கும் விதத்தில், ஆசிய கோப்பை தொடரில் இரண்டு அரை சதங்கள், ஒரு சதம் என மொத்தம் 5 போட்டிகளில் 276 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளார் விராட் கோலி. சுமார் 1000 க்கும் அதிகமான நாட்களாக விராட்டின் 71 ஆவது சதத்திற்கு ரசிகர்கள் ஏங்கி வந்த நிலையில், தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இதனால், இனி வரும் தொடர்களில் நிச்சயம் தொடர்ந்து தனது ஃபார்மை கோலி நிரூபிப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், கோலியின் சதத்திற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோலி சதமடித்த போது மைதானத்தில் இருந்த வயதான இந்திய ரசிகர் ஒருவர் செய்த விஷயம் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்த்துள்ளது.
கோலி சதமடித்ததும் மைதானத்தில் இருந்த வயதான ரசிகர் ஒருவர், கோலிக்கு தலை வணங்கி இரண்டு கைகளையும் மேலே இருந்து கீழே தாழ்த்தி வாழ்த்தினார். அவரை போலவே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மைதானத்தில் இருந்த ஏராளமானோரும் கோலிக்கு தலை வணங்கி இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மாற்றம் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Bow down to the king. #ViratKohli𓃵 #virat #Kohli THE KING IS BACK pic.twitter.com/AuyxpxKpXe
— Am (@ammar_rk) September 8, 2022
மற்ற செய்திகள்