'கை தட்டல்கள்', 'ஆரவாரங்கள்' இல்லாமல் ... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ... முதல் முறையாக நடந்த சம்பவம் !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வரும் முதலாவது ஒரு நாள் போட்டி ரசிகர்கள் இல்லாமல் தற்போது நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியைக் காண ரசிகர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. மக்கள் அதிகம் பேர் மைதானத்தில் கூடும் சூழ்நிலை உள்ளதால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. சர்வதேச அளவில் ரசிகர்கள் யாரும் இல்லாமல் நடைபெற்ற முதல் போட்டியாக இது பதிவாகியுள்ளது.
கடந்த எட்டாம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி 20 கோப்பை இறுதி போட்டியைக் காண வந்த ரசிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.