திடீரென நிறுத்தப்பட்ட 'மேட்ச்'... "ரொம்ப வித்தியாசமான காரணமா இருக்கே இது !!..." பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது கிரிக்கெட் போட்டிகள் பல இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

திடீரென நிறுத்தப்பட்ட 'மேட்ச்'... "ரொம்ப வித்தியாசமான காரணமா இருக்கே இது !!..." பரபரப்பு 'சம்பவம்'!!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்ற நிலையில், முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு டி 20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

முன்னதாக நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 11.4 ஓவர்களில் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் கூடுதல் சூரிய ஒளி தான். சூரிய ஒளி சுட்டு எரித்த அதே வேளையில், அதன் வெளிச்சமும் அதிகமாக இருந்தது. இதனால் அப்போது பேட்டிங் செய்த வீரர்கள் பந்துகளை பார்க்க முடியாமல் திணறினார்கள். 

அது மட்டுமில்லாமல், ஃபீல்டர்களும் பந்தை சரியாக கவனித்து பிடிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இரு அணி வீரர்களும் சூரிய ஒளியால் அவதிப்பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சூரியன் ஓரளவு மறைந்த பின்னர் தான் போட்டி தொடர்ந்தது. பொதுவாக, மழை காரணமாக போட்டி தடைபடும். ஆனால், நியூஸிலாந்திலுள்ள நேப்பியர் மைதானத்தில் மட்டும் வெயில் காரணமாக போட்டிகள் தடைபடுகிறது. கடந்த ஆண்டும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, வெயில் காரணமாக தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்