‘கடைசி ஓவரில்’... ‘நியூசிலாந்து அணியை உதற விட்ட ஷமி’... 'அதிர்ச்சி அடைந்த கேப்டன்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெற்றிபெறும் நிலையில் இருந்த நியூசிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் முகமது ஷமி கொடுத்த அதிர்ச்சியால், போட்டி டிராவில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி வெற்றிபெற்றது.

‘கடைசி ஓவரில்’... ‘நியூசிலாந்து அணியை உதற விட்ட ஷமி’... 'அதிர்ச்சி அடைந்த கேப்டன்'!

இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனின் அதிரடி ஆட்டத்தால், கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய முகமது ஷமியின் முதல் பந்திலேயே ராஸ் டெய்லர் சிக்ஸர் அடித்து அதிர்ச்சியளித்தார். இதனால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்தார்கள். ஆனால், 5 பந்துகளில் 3 ரன்களே தேவை என்ற எளிதான நிலையிலிருந்து ஆட்டம் மாறியதுதான் அதிசயம்.  2-வது பந்தில் ராஸ் டெய்லர் ஒரு ரன் எடுத்தார். கடைசி 4 பந்தில் இரண்டு ரன்களே தேவைப்பட்டது.

இதனால் நியூசிலாந்து எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3-வது பந்தில், 95 ரன்கள் எடுத்த கேன் வில்லியம்சனின் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தி அசத்தி அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த சைஃபர்ட், 2 பந்துகளிலும் தடுமாறினார். கடைசிப் பந்தை எதிர்கொண்டார் டெய்லர். அப்போது ஆட்டம் சமனில் இருந்தது. 1 ரன் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் கடைசிப் பந்தில் டெய்லரை, கிளீன் போல்ட் செய்தார் ஷமி. இதனால் ஆட்டம் சமன் ஆகி, சூப்பர் ஓவர் நிலைக்குச் சென்றது.

MOHAMMADSHAMI, IND VS NZ, LAST OVER