NZ Vs AUS: என்னங்க பறந்து போயிலாம் கேட்ச் பிடிக்குறீங்க?.. மொத்த ஸ்டேடியமும் ஷாக் ஆகி நின்னுடுச்சு.. மிரளவைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசி வீரர் க்ளென் பிலிப்ஸ் பறந்தபடியே கேட்ச் பிடித்தது பலரையும் திகைக்க செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
T20 உலகக்கோப்பை போட்டிகள்
இந்த வருடத்துக்கான T20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. இதில் க்ரூப் 1 பிரிவில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் நேற்று மோதின. சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி, அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கெட்களை இழந்து 200 ரன்களை குவித்தது. அந்த அணியில் டிவான் கான்வே 92 ரன்கள் விளாசினார். அதேபோல, மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஃபின் ஆலன் 42 ரங்களும், நீஷம் 26 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து வெற்றி
இதனையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி சேஸிங்கை துவங்கியது. ஆரம்பம் முதலே, அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த அந்த அணி, 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய கான்வே ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மார்க்கஸ் ஸ்டோய்னஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது சாண்ட்னர் பந்துவீச வந்தார். அப்போது, ஸ்டோய்னஸ் பந்தை தூக்கி அடிக்க, க்ளென் ஓடிச் சென்று பறந்தபடியே அந்த கேட்சை எடுத்தார். இதனை பார்த்த சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் பிரம்மித்துப் போயினர்.
இதனிடையே இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Superhuman Phillips!
We can reveal that this catch from Glenn Phillips is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos of the Game packs from Australia v New Zealand.
Grab your pack from https://t.co/8TpUHbQQaa to own iconic moments from every game. pic.twitter.com/VCDkdqmW3m
— ICC (@ICC) October 22, 2022
மற்ற செய்திகள்