VIDEO: ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்னா 'என்ன'ன்னு காட்டிட்டாரு...! 'நீங்க வேற லெவல் தல...' 'அப்படி' ஒரு ரன் எடுத்திருந்தா தப்பா இருந்திருக்கும்...! - கெத்து காட்டிய நியூசிலாந்து வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடேரில் மிட்செல் நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தது மட்டுமல்லாமல், கிரிக்கெட் ஆட்ட உணர்வு என்ற விதத்தில் ஒரு உண்மையான ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று (11-11-2021) அபுதாபியில் நடந்த டி-20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலக்கை விரட்டும் நியூசிலாந்து அணி ரன்களுக்குத் தவித்துக் கொண்டிருந்தது.
ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல் மட்டும் சிறப்பாக ஆடாமல் போயிருந்தால் இந்நேரம் இங்கிலாந்துதான் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கும். இந்த நிலையில் சேசிங்கில் 18-வது ஓவரில் ஆதில் ரஷீத் பவுலிங் போடும்போது தான் ஒரு ரன்னை ஓடினால் அது பவுலர் ஆதில் ரஷீத் பீல்டிங் முயற்சியைத் தடுப்பதாக அமைந்து விடும் என்று ஒரு ரன்னைத் துறந்தார்.
ஆதில் ரஷீத் வீசிய பந்தை ஜேம்ஸ் நீஷம் நேராக ஆடினார், மிட்செல் எதிர்முனையில் இருந்தார். டேரல் மிட்செல் குறுக்கே வராமல் இருந்திருந்தால் ஆதில் ரஷீத் அதை பிடித்து விடுவார் என்ற நிலைதான் இருந்தது. இதன் மூலம் ஒரு ரன்னும் கிடைக்கும் ஆனால் டேரல் மிட்செல் அந்த ரன் வேண்டாம் என்றார்.
ஓடியிருந்தால் தான் ஓடியதால்தான் அந்த பந்தை ரஷீத்தினால் பிடிக்க முடியவில்லை என்ற சர்ச்சை கிளம்பியிருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இது குறித்து மிட்செல் கூறும்போது, “நான் ஓட முயன்ற போது ரஷீத் பந்தைப் பிடிப்பதற்கு குறுக்காக வருவேன் என்றுதான் நினைத்தேன்.
என்னால் சர்ச்சையாவதை நான் விரும்பவில்லை. போட்டியை நல்ல ஸ்பிரிட்டுடன் ஆட வேண்டும். நான் அந்த ரன்னை எடுத்திருந்தால் அது என் தவறாக முடிந்திருக்கும். அதனால் இப்போ என்ன?, மீண்டும் நம்பிக்கையோடு விளையாட வேண்டும். ஆனால் அந்த ஒரு ரன் ஆட்டத்தின் முடிவின் மீது தாக்கம் செலுத்தாது அதிர்ஷ்டம் தான்” என்று கூறியுள்ளார்.
இப்படி ஒரு ஜெண்டில்மேன் கிரிக்கெட்டை ஆடி, நிஜமான ஸ்போர்ட்ஸ்மேன் யார் என்பதை டேரல் மிட்செல் நிரூபித்தார்.
Anything that sums up #NZ cricket is that.
Take A Bow! Daryl Mitchell.
The Match situation was this, Need 34 runs from 17b.
Respect, Not only for this but for throughout showing respect towards the game. Ture GENTLEMEN team in our generation.#T20WorldCup pic.twitter.com/VU444SfeGW
— Nurul Amin (@AimAminAim) November 10, 2021
மற்ற செய்திகள்