இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து திடீரென விலகிய கேன் வில்லியம்சன்.. என்ன காரணம்..? அப்போ கேப்டன் யார்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்து பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 172 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 17.5 ஓவர்களில் 173 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் டி20 போட்டி நாளை (17.11.2021) ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று ஜெய்ப்பூர் வந்தடைந்த நியூஸிலாந்து வீரர்கள், அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Williamson), டி20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் டிம் சவுதி ( Tim Southee) கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்