உலகப் புகழ் டென்னிஸ் ஜாம்பவானுக்கு 'நோ' சொல்லிய ஆஸ்திரேலியா... கொந்தளிக்கும் ஜோகோவிச் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகப் புகழ் பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ஆன நோவாக் ஜோகோவிச்-க்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் மறுப்பு தெரிவித்து அவரைத் திருப்பி அனுப்பி உள்ளது.
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் வருகிற ஜனவரி 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆன நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா வந்து இறங்கினார். செர்பியாவைச் சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் இதுவரையில் 9 முறைகள் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரைக் கைப்பற்றி உள்ளார்.
இவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என ஆஸ்திரேலியா நாட்டுக்குள் இவரை அனுமதிக்க அந்நாட்டு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலியா டென்னிஸ் சம்மேளனம் விலக்கு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதற்கான சான்றிதழ்களை ஜோகோவிச் தரப்பு சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஜோகோவிச் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தகுதியானவன் இல்லை என்றும் அதற்கான மருத்துவ காரணங்கள் கொண்ட மருத்துவ சான்றிதழையும் சமர்பித்தார்.
ஆனாலும், முறையான சான்றிதழ்கள் இல்லை என ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய ஜோகோவிச்சுக்கு விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது. இதனால் நீண்ட நேரமாக அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை உடன் விமான நிலையத்திலேயே காத்திருந்த ஜோகோவிச் தற்போது தனது நாடான செர்பியாவுக்கே திருப்பி அனுப்பப்பட உள்ளார்.
மற்ற செய்திகள்