‘நீங்க சொல்றது நம்புற மாதிரியே இல்லயே’... ‘உங்களுக்கு தெரியாம எப்படி நடந்துச்சு???’... கேள்விகளால் துளைத்து எடுக்கும் சேவாக்...!!! மாட்டிக் கொண்ட ரவி சாஸ்திரி...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணியில் தேர்வு செய்யாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

‘நீங்க சொல்றது நம்புற மாதிரியே இல்லயே’... ‘உங்களுக்கு தெரியாம எப்படி நடந்துச்சு???’... கேள்விகளால் துளைத்து எடுக்கும் சேவாக்...!!! மாட்டிக் கொண்ட ரவி சாஸ்திரி...!!!

ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவிற்கு, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட முடியவில்லை. அதனால் மும்பை அணிக்கு கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து பிசிசிஐ பிசியோதெரபிஸ்ட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மருத்துவக் குழு ரோகித் சர்மாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.  விரைவில் அணிக்கு திரும்பி விடுவார் என்று தகவல்கள் கூறி வந்தநிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிகளில் ஒன்றில் கூட ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. காயத்தை காரணமாக காட்டி, ஜனவரி வரை நடைபெற உள்ள தொடர்களில் அவர் பெயர் நீக்கப்பட்டு இருந்தது.

Not possible Ravi Shastri didn't know about Rohit Sharma's situation

இந்த நிலையில், பிசிசிஐக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார். இது பிசிசிஐ அவரை அணியில் இருந்து நீக்கியதை கேலிக் கூத்தான விஷயமாக மாற்றியது.

பிசிசிஐ மீது கடும் விமர்சனம் எழுந்தது. அதே போல, ரோஹித் சர்மா காயம் பற்றி தமக்கு தெரியாது எனக் கூறிய இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் சந்தேகத்தை கிளப்பியது. அவர் காயத்தை பற்றி முழுமையாக தெரியவில்லை எனக் கூறியதுடன், வீரர்கள் தேர்வுக் குழுவில் தான் இல்லை என்றும் கூறியதும் பெரும் விமர்சனம் எழுந்தது. மேலும் ரோஹித் காயம் குணமாகாமல் விரைவில் அணிக்கு திரும்ப முயற்சி செய்யக் கூடாது எனவும் அவர் கூறி இருந்தார்.

Not possible Ravi Shastri didn't know about Rohit Sharma's situation

இது குறித்து முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ரோஹித் சர்மா காயம் குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவரிடம் நிச்சயம் இது பற்றி தேர்வுக் குழுவில் பேசி கருத்து கேட்டு இருப்பார்கள். பயிற்சியாளர் தேர்வுக்குழுவில் இல்லை என்று சொல்வது நம்பும்படி இல்லை. அப்படி இல்லாமல் இருந்திருந்தாலும், வீரர்கள் தேர்வுக்கு முன்னதாக ஒருநாள் அல்லது இரண்டு நாளுக்கு முன்னதாக அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் தனிப்பட்ட முறையில் ஆவது கேட்டு இருப்பார்கள் என்றார் சேவாக்.

Not possible Ravi Shastri didn't know about Rohit Sharma's situation

மேலும், தற்போது ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஆடி விட்டார். அடுத்து பிளே-ஆஃப் சுற்றிலும் ஆடுவார். ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என பிசிசிஐயை கேள்விகளால் விமர்சித்துள்ளார் சேவாக்.

மற்ற செய்திகள்