இதெல்லாம் வீரம்னு நெனச்சிட்டு இருக்கீங்களா.. மிகப்பெரிய முட்டாள்தனம்.. ரிஷப் பந்தை லெஃப்ட் ரைட் வாங்கிய கம்பீர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை கௌதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 202 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 266 ரன்களும் எடுத்தது.
அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியை தங்களது முதல் இன்னிங்சில் 229 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 243 ரன்களும் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேட்டிங் செய்தபோது தென் ஆப்பிரிக்க வீரர் வென்டெர்டுசைன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் வெளியேறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், ‘ஒரு போட்டியில் யாரை வேண்டுமானாலும் எளிதாக ஸ்லெட்ஜிங் செய்து விடலாம். ஆனால் உங்கள் கையில் பேட் இருக்கும்போது எதிரணியை கையாள்வது என்பது மிகக் கடினமான ஒன்று. அணி இக்கட்டான நிலைமையில் இருக்கும் போது தேவையில்லாமல் சண்டை போட்டு ரிஷப் பந்த் அவுட் ஆனது எனக்கு பிடிக்கவில்லை. இதுபோன்ற பெரிய இன்னிங்ஸில் அவர் தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை ரிஷப் பந்த் செய்தது தைரியமான செயல் ஒன்றும் கிடையாது, அது முட்டாள்தனமான செயல். அவரின் இந்த செயலால் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளேன். இந்த போட்டியில் அவர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது. பொறுமையைக் கையாண்டால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி கிடைக்கும். அதைவிடுத்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு ரிஷப் பந்த் ஆட்டமிழந்த விதம் மோசமான செயல். இதுபோன்ற விஷயங்களில் அவர் இனி வரும் காலங்களில் ஈடுபடக்கூடாது’ என கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்