கே எல் ராகுல் பேருகிட்ட இருந்த ஒரு விஷயம் மிஸ்ஸிங்.. பிசிசிஐ அறிவிப்பால் குழப்பத்தில் ரசிகர்கள்?!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

கே எல் ராகுல் பேருகிட்ட இருந்த ஒரு விஷயம் மிஸ்ஸிங்.. பிசிசிஐ அறிவிப்பால் குழப்பத்தில் ரசிகர்கள்?!

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | தொடரின் பாதியில்.. திடீரென நாடு திரும்பிய ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்.. பின்னணி என்ன?

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி அசத்தல் வெற்றி பெற்று, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையையும் தக்க வைத்து கொண்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது இந்திய அணி. தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே வாய்ப்பு இருப்பது போல தெரிந்த சூழலில், இரண்டாவது இன்னிங்சில் போட்டியே மாறி போனது. 1 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலிய அணி, ஜடேஜா சூழலில் சிக்கித் தவித்தது.

கடைசி 28 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி, 113 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப் பிடித்தது. இந்த வெற்றியின் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது இந்திய அணி.

இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்றே ஆக வேண்டுமென்ற சூழலில், மறுபக்கம் தொடரை வெல்லும் முனைப்பிலும் இந்திய அணி உள்ளது. இதனிடையே, அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், ஏதும் மாற்றம் செய்யப்படாத சூழலில், ஜெய்தேவ் உனத்கட் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No Vice Captain for india team announced for last 2 test matches

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் காரணமாக, முதல் ஒரு நாள் போட்டியில் ரோஹித் ஷர்மா இடம்பெறாத சூழலில், இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளில், ரோஹித் ஷர்மா இந்திய அணியை தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு விஷயம் இடம்பெறாமல் போனது, அதிக கவனம் பெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு கே எல் ராகுல், துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், அடுத்து 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா கேப்டன் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள சூழலில், துணை கேப்டன் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால், பின்னர் துணை கேப்டன் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | "இவ்ளோ சின்ன வயசுலயா?".. "நெஞ்சு வலியுடன் கபடி பயிற்சி கொடுத்த 26 வயது இளைஞர்.. மாரடைப்பால் உயிரிழந்த துயரம்!!

CRICKET, INDIA TEAM, BCCI, NO VICE CAPTAIN FOR INDIA TEAM

மற்ற செய்திகள்